எந்த கிழமையில் எந்த பொருட்களை வாங்க கூடாது தெரியுமா.?

Advertisement

நாட்களும் வாங்க கூடாத பொருட்களும்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எந்த கிழமையில் எந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆன்மீகத்தின்படி, ஒவ்வொரு நாட்களுக்கும் உகந்த பொருள் என்று உள்ளது. அதன்படி, அந்த நாட்களுக்குரிய பொருட்களை வாங்கினால், வீட்டில் நன்மை உண்டாகும். செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். அதேபோல், இந்த நாட்களில் இந்த பொருட்களை வாங்கினால் நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது.

எனவே, எந்த நாட்களில் எந்த பொருட்களை வாங்க கூடாது என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். ஆகையால் உங்களுக்கு பயனுள்ள வகையில் நாட்களும் வாங்க கூடாத பொருட்களும் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா..?

திங்கட்கிழமை வாங்கக் கூடாத பொருட்கள்:

  • திங்கட்கிழமை அன்று, தானியங்கள் வாங்குதல் கூடாது.
  • மேலும், வண்ணங்கள், தூரிகைகள், இசைக்கருவிகள் போன்ற கலை சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது.
  • நகல் புத்தகங்கள், விளையாட்டு தொடர்பான பொருட்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடாது.
  • திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் சிவபெருமான் கோபப்படுவார். எனவே, இன்றைய தினத்தில் இதுபோன்ற பொருட்களை வாங்குவது அசுமாக கருதப்படுகிறது.

நாட்களும் பயன்படுத்தக்கூடாத உடையின் நிறங்களும்..!

செவ்வாய்க்கிழமை வாங்கக் கூடாத பொருட்கள்:

  • செவ்வாய்க்கிழமை அன்று, பால், மரம் மற்றும் தோல் சம்பந்தமான பொருட்களை வாங்குதல் கூடாது.
  • மேலும், உலோகங்கள் மற்றும் காலணிகளை வாங்க கூடாது.

புதன்கிழமை வாங்கக் கூடாத பொருட்கள்:

  • புதன்கிழமை அன்று அரிசி, மருந்து, வீடு, மனை மற்றும் பாத்திரம் போன்ற பொருட்களை வாங்குதல் கூடாது.
  • மேலும், இன்றைய தினத்தில் மண்ணெண்ணெய் வாங்க கூடாது.

வியாழன்கிழமை வாங்கக் கூடாத பொருட்கள்:

வியாழன்கிழமை அன்று கண்ணாடி பொருட்கள், பூஜை பொருட்கள் மற்றும் கூர்மையான பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை வாங்கக் கூடாத பொருட்கள்:

வெள்ளிக்கிழமை அன்று மசாலா பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், இரும்பு சார்ந்த பொருட்களை வாங்குதல் கூடாது. மேலும், இன்றைய தினத்தில் மசாலா பொருட்களை அரைப்பது கூடாது.

எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..?

சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாத பொருட்கள்:

  • சனிக்கிழமையில் உப்பு வாங்க கூடாது.
  • அதிக எடையுள்ள பொருட்கள் மற்றும்  கடுமையான பொருட்களை வாங்க கூடாது.
  • வீடு மனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • எண்ணெய் வாங்க கூடாது.
  • இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்க கூடாது.

ஞாயிற்றுக்கிழமை வாங்கக் கூடாத பொருட்கள்:

ஞாயிற்றுக்கிழமை அன்று இரும்பு மற்றும் இரும்பினால் ஆன பொருட்களை வாங்குதல் கூடாது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement