எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

Advertisement

எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம் | Entha Natchathirathil Enna Seiyalam

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக ஆன்மீகத்தில் நட்சத்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கை இப்படி இருக்கப்போகிறது என்பதையே அவரவரின் ராசி நட்சத்திரங்கள் தான் தீர்மானிக்கிறது.

ஆன்மீகத்தின்படி, நாம் செய்யவும் அணைத்து செயல்களையும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும். அப்போது தான் நாள் பலனை அளிக்கும். எனவே, அந்த வகையில் எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Entha Natchathirathil Enna Seiyalam:

எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்

1. அசுவினி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

அசுவினி நட்சத்திரத்தில் திருமணம், வளைகாப்பு மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்ற சுப காரியங்களை செய்யலாம்.

2. ரோகிணி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

ரோகிணி நட்சத்திரத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் மற்றும் வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்யலாம்.

3. மிருகசீரீடம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

மிருகசீரீடம் நட்சத்திரத்தில் காதணீ விழா, முடிகாணீக்கை, வெளியூர் பயணம் போன்றவற்றை செய்யலாம்.

4. புனர்பூசம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

புனர்பூசம் நட்சத்திரத்தில் மாங்கல்யம் மற்றும் வளைகாப்பு செய்யலாம்.

5. பூசம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

பூசம் நட்சத்திரத்தில் வீடு கட்டத் துவங்குதல் மற்றும் கிரகப்பிரவேசம் போன்றவற்றை செய்யலாம்.

6. மகம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

மகம் நட்சத்திரத்தில் மாங்கல்யம் செய்தல், போர்வெல் அமைத்தல் போன்றவற்றை செய்யலாம்.

7. பூரம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

பூரம் நட்சத்திரத்தில் ஆடு, மாடு வாங்கலாம்.

8. உத்திரம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

உத்திரம் நட்சத்திரத்தில் கிணறு வெட்டலாம்.

9. அஸ்தம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

அஸ்தம் நட்சத்திரத்தில் வீடு கட்டத் துவங்குதல், கிரகப்பிரவேசம் செய்யலாம்.

10. சித்திரை நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

சித்திரை நட்சத்திரத்தில் பெயர் சூட்டுதல், காதணீ விழா போன்றவற்றை செய்யலாம்.

11. சுவாதி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

சுவாதி நட்சத்திரத்தில் திருமணம் நடத்த, முடிகாணீக்கை, பள்ளியில் சேர்தல் ஆகியவற்றை செய்யலாம்.

12. விசாகம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

விசாகம் நட்சத்திரத்தில் ஆடு, மாடு வாங்கலாம்.

எந்த திதியில் என்ன செய்யலாம்..!

13. அனுஷம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

அனுஷம் நட்சத்திரத்தில் ஆபரணம் அணியலாம்.

14. மூலம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

மூலம் நட்சத்திரத்தில் வீடு கட்டத் துவங்குதல், கிரகப்பிரவேசம் போன்றவை செய்யலாம்.

15. உத்திராடம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

உத்திராடம் நட்சத்திரத்தில் ஆபரணம் வாங்கலாம்.

16. திருவோணம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

திருவோணம் நட்சத்திரத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

17. அவிட்டம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

அவிட்டம் உபநயனம் செய்தல், கிணறு வெட்டுதல் போன்றவை செய்யலாம்.

18. சதயம் நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

சதயம் நட்சத்திரத்தில் திருமணம் நடத்துதல், மாங்கல்யம் செய்தல் ஆகியவற்றை செய்யலாம்.

19. பூரட்டாதி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

பூரட்டாதி நட்சத்திரத்தில் ஆடு, மாடு வாங்குதல் மற்றும் விவசாய பணி துவங்குதல் போன்றவற்றை செய்யலாம்.

20. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சுவாமி பிரதிஷ்டை, வளைகாப்பு செய்யலாம்.

21. ரேவதி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்.?

ரேவதி நட்சத்திரத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்யலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement