எந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…!

Advertisement

வீட்டில் எந்த விளக்கு ஏற்றினால் நல்லது

இந்துக்கள் முறையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது ஒன்று. சில பேர் காலை மற்றும் மாலை என்ற் இரண்டு வேலையும் விளக்கு ஏற்றுவார்கள், சில பேர் மாலை நேரத்தில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். சில வீடுகளில் நல்ல நாள் மற்றும் விசேஷ நாள்களில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். சில வீடுகளில் தினமும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதில் விளக்கு ஏற்றும் முறைகள் இருக்கிறது. அதாவது எந்த திரியில் விளக்கு ஏற்ற வேண்டும், எந்த விளக்கில் ஏற்றினால் என்ன பலன்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

என்ன விளக்கு ஏற்றினால் என்ன பலன்:

தங்கத்தில் விளக்கு ஏற்றினால் வீட்டில் உள்ளபவர்களின் ஆயுள் நீடிக்கும்.

வெள்ளி விளக்கு ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும், இதனால் உங்கள் வீட்டில் செல்வத்திற்கு எந்த பிரச்சனை இல்லாமல் சிறப்பாக வாழ முடியும். மேலும் வீட்டில் ஏதும் திருஷ்டி இருந்தால் அவை விலகும்.

வெண்கலத்தில் விளக்கு ஏற்றினால் தோஷங்கள் ஏதும் இருந்தால் அவை நீங்கும், மேலும் உங்களின் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும்.

செம்பு விளக்கு ஏற்றினால் வீட்டில் எப்போதும் நிம்மதி நிலைத்திருக்கும்.

பித்தளையில் விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.

அகல் விளக்கில் விளக்கு ஏற்றினால் எல்லா வசதிகளும் கிடைக்கும், வாழ்க்கையானது சீரும் சிறப்புமாக இருக்கும்.

விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திரங்கள்

திரி மற்றும் பலன்கள்: 

வாழை நார் திரியில் விளக்கு ஏற்றினால் சாபங்கள் அகலும்.

பருத்தி திரியில் விளக்கு ஏற்றினால் தரித்திரியம் நீங்கும்.

பன்னீர் திரியில் விளக்கு ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

தாமரை திரியில் விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வ நிலை அதிகரிக்கும்.

பச்சை திரியில் விளக்கு ஏற்றினால் குபேரரின் அருள் கிடைக்கும்.

மஞ்சள் திரியில் விளக்கு ஏற்றினால்  குடும்ப வாழ்க்கையானது சிறப்பாக இருக்கும்.

சிவப்பு திரியில் விளக்கு ஏற்றினால் திருமண தடை ஏதும் இருந்தால் அவை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

விளக்கு வகைகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement