வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் எறும்புகள் அதிகம் இருந்தால் அதிர்ஷ்டமா? கஷ்டமா?

Updated On: July 31, 2025 1:22 PM
Follow Us:
erumbu palangal
---Advertisement---
Advertisement

எறும்பு ஆன்மீக பலன்

வீட்டில் எறும்புகள் வருவது சாதாரமானது தான். ஆனால் சில பேர் வீட்டில் அடிக்கடி எறும்பை வரக்கூடும். இவை எதற்காக வருகிறது என்று யோசிப்பார்கள். இதனை எப்படியாவது வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக பூச்சி மருந்து, சாக்பீஸ் போன்றவை வீடு முழுவதும் பரப்பி விடுவார்கள். ஆனால் ஆன்மீக ரீதியாக எறும்புகள் வீட்டிற்கு வருவது சிலவற்றை உணர்த்துகிறது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

சிவப்பு எறும்பு:

வீட்டில் சிவப்பு எறும்பு வந்தால் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்க போகிறது என்பதை குறிக்கிறது. பண பற்றாக்குறையால் கடன் வாங்க நேரிடும் என்பதையும் குறிக்கிறது. இந்த எறும்பு வருவது உங்களின் எதிர்மறையான விஷயங்களை கொடுக்க கூடியதாக இருக்கும். 

கருப்பு எறும்பு:

கருப்பு எறும்பு உங்கள் வீட்டில் வந்தால் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். உங்களின் பணிகளில் வளர்ச்சி காணப்படும். அல்லது உங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சி பாதையை நோக்கி போக போகிறீர்கள் என்பதையும் உணர்த்துகிறது. வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு ஆனது அதிகரிக்கும். 

அரிசியில் கருப்பு எறும்பு வந்தால் பணவரவு ஆனது அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க போகிறது என்பதை உணர்த்துகிறது. செல்வ நிலையானது அதிகரிக்க போகிறது என்பதையும் காட்டுகிறது. சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.

எறும்பு வரும் திசை:

எறும்பு ஆனது எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை பொறுத்து அவை நமக்கு சிலவற்றை உணர்த்துகிறது. வடக்கு மற்றும் தெற்கு திசையில் எறும்புகள் வந்தால் குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும். 

கிழக்கு திசையில் எறும்புகள் வந்தால் எதிர்மறையான செய்திகள் நடக்கும். 

மேற்கு திசையில் எறும்புகள் வந்தால் தேவையில்லாமல் வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவற்றால் உங்களுக்கு எந்த ஆதாயமும் இருக்காது. 

வீட்டில் மேல் எறும்புகள் வந்தால் அதாவது கூரையின் மேல், ஓட்டின் மேல், மாடி வீட்டின் மேல் வந்தால் பணவரவு அதிகமாக கிடைக்க போகிறது என்பதை உணர்த்துகிறது.

எறும்பு ஆனது சுவற்றில் கீழிருந்து மேலே போவது போல் இருந்தால் உங்களின் வாழ்க்கையில் வளர்ச்சி பாதை கிடைக்க போகிறது. அதுவே மேலிருந்து கீழே வருவது போல் இருந்தால் வாழ்க்கையில் எதையோ இழக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. 

இது போன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.  ஆன்மீக தகவல்கள் 

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now