குடும்ப புகை படங்களை எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும்? – Family Photo Matti Vaikkum Thisai
வணக்கம் மக்களே.. பொதுவாக குடும்ப புகைப்படங்கள் என்பது நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை, அவை எப்போதும் நமது உள்ளத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருக்கும், அவை மகிழ்ச்சியான நினைவுகள் மற்றும் நமக்கு மிகவும் பிடித்தவர்களை ஞாபகமூட்டும் வகையில் இருக்கும். இப்படிப்பட்ட பொக்கிஷங்களை நாம் இந்த இந்த பூமியில் இருக்கும் வரை பத்திரமாக வைத்துக்கொள்ள நினைப்போம். நமது உள்ளத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும் இந்த புகைப்படங்களை. நமது வீட்டில் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?
தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. ஆக நம் வீட்டில் மாட்டி வைக்கும் குடும்ப போட்டவை நாம் குறிப்பிட்ட திசையில் மாட்டி வைத்தோம் என்றால் நற்பலன்களை பெற முடியும். சரி வாங்க குடும்ப போட்டவை எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
படுக்கை அறை வாஸ்து – கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?
குடும்ப போட்டோ மாட்டும் திசை? – Family Photos Vasthu Shastram
- பொதுவாக குடும்ப போட்டவை உங்கள் வீட்டில் ஒரு பொழுது தெற்கு திசையில் மாட்டி வைக்க வேண்டாம் அது நன்மை தராது. அதற்கு மாறாக அந்த படத்தில் உள்ளவர்களுக்கு பல விதங்களில் கஷ்டங்கள் தான் வந்து சேரும். அந்த புகைப்படத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அந்த அத்துணை நபர்களுக்கும் கஷ்டங்கள் வந்து சேரும்.
- அப்பறம் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். குடும்ப போட்டோக்களை வடக்கு திசை பார்த்து மாட்டி வைப்பது நல்ல பலன்களை பெற்று தரும். எந்த ஒரு பிரச்சனைகளும் வராது, சுபிட்சம் உண்டாகும், மேலும் மேலும் நல்ல பலன்கள் கிடைக்க கூடும்.
- உங்கள் வீட்டில் வடக்கு திசையில் புகைப்படக்கலை மாட்டி வைக்க இடம் வசதி இல்லை என்றால் கிழக்கு திசையில் குடும்ப புகை படங்களை மாட்டி வைப்பதற்கு ஏற்ற திசை ஆகும்.
- அதேபோல் மேற்கு திசையிலும் ஓரளவு மாட்டி வைக்கலாம், ஆனால் தெற்கு திசையில் மட்டும் குடும்ப புகைப்படங்களை மாட்டி வைக்க வேண்டாம். இருப்பினும் தெற்கு திசை என்பது இறந்தவர்களின் புகை படங்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறந்த திசையாகும். இரத்தவர்களுடைய புகைப்படங்களை தவிர மற்ற புகை படங்களை அங்கு மாட்டி வைக்க வேண்டாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாஸ்து படி பூஜை அறை, படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறைகளுக்கான அளவுகள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |