கை விரல்களை வைத்து உங்களின் குணத்தை சொல்கிறேன்.. சரியான்னு செக் பண்ணுங்க..

Advertisement

Fingers Personality Test

நமது குணத்தை அறிந்து கொள்வதற்கு நெருங்கி பழகும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். அதில் சில நபர்கள் சொல்வார்கள், சில நபர்கள் சொல்ல மாட்டார்கள். அதனை தான்  ஜோதிடத்தில் நமது உடல் அமைப்பினை வைத்து குணங்களை கணித்து  வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கை விரல்களை வைத்து உங்களின் குணத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் பெரியதாக இருந்தால்:

fingers personality test in tamil

நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விரைவாக பொறுப்பேற்கக்கூடியவராக இருப்பீர்கள். நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உடையவராக இருப்பீர்கள். மற்றவர்களை  வழி நடத்துவதில் வல்லவராக இருப்பீர்கள். நீங்கள் சமயோசிதமாகவும், அறிவுரை வழங்குவதில் மிகவும் சிறந்தவராகவும் காணப்படுகிறீர்கள். உங்களுக்கு ஒரு செயல் செய்ய வேண்டும் அல்லது பொருளோ வாங்க வேண்டும் என்றால் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் வாங்காமல் கூட இருப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் வாங்குவீர்கள்.

அலர்ட்டாக இருங்கள்..! யார் யார் தெரியுமா உங்கள் ராசி இருக்கானு கொஞ்சம் பாருங்க..!

ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் சமமாக இருந்தால்:

fingers personality test in tamil

உங்கள் ஆள்காட்டி விரலும் மோதிர விரலும் ஒரே நீளமாக இருந்தால் , நீங்கள் சீரான வாழ்க்கையை நடத்துபவர்.  உங்களை சுற்றி உள்ளவர்கள் மீது அக்கறையாகவும், உண்மையாவும் இருக்க கூடியவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவர்களின் பிரச்சனைகளை கேட்டு சரி செய்வதிலும் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் அமைதியான குணம் கொண்டவராக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களிடம் இரகசியமாக ஒரு விஷயத்தை சொன்னால் அந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்து கொள்வீர்கள். அதனால் உங்களிடம் எந்த விஷயத்தையும் நம்பி சொல்லலாம்.

மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் பெரியதாக இருந்தால்:

fingers personality test in tamil

ஆள்காட்டி விரலை விட மோதிர விரல்கள் சற்று குறைவாக இருந்தால்  நபர்கள் தன்னம்பிக்கை மற்றும் இயல்பான தலைவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் கணக்கீடு மற்றும் அவர்களின் செயல்களில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். நம்பிக்கை உடையவர்களாக இருப்பீர்கள். செலவு செய்வதற்கு முன் அதை யோசித்து செலவு செய்வீர்கள். இரக்கம் குணம் உடையவர்களாக இருப்பீர்கள். ஒரு செயலை செய்வதற்கு முன் அதை ஆராய்ந்து செய்லபடுவீர்கள்.

கையை இப்படி முறுக்கிறீங்களா..! அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement