FLAMES Calculator in Tamil – ஃப்ளேம்ஸ் கால்குலேட் பண்ண தெரியுமா உங்களுக்கு?

FLAMES Calculator in Tamil

FLAMES Calculator in Tamil – ஃப்ளேம்ஸ் கால்குலேட்டர்

ஹாய் பிரண்ட்ஸ் நாம எல்லேருமே பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை கடந்து வந்திருப்போம். அப்போ நாம் விளையாட்டுத்தனமாக இந்த FLAMES கால்குலேட்டர் கேமை கண்டிப்பாக விளையாடி இருப்போம். அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதாவது நமக்கு மிகவும் பிடித்த நபரின் பெயரையும், நமது பெயரையும் வைத்து இந்த FLAMES கால்குலேட்டர் கேமை விளையாடி இருந்திருப்போம். இந்த கேமின் இறுதியில் கிடைத்த ரிசல்ட்டில் நமக்கு பிடித்த நபருக்கும், நமக்கும் என்ன உறவு என்பதை இந்த FLAMES கால்குலேட்டர் கேம் தெரியப்படுத்தும்..

ஃப்ளேம்ஸ் கால்குலேட்டர் – Love Calculator FLAMES Game:

அதாவது FLAMES என்பது 6 எழுத்துக்களை கொண்ட ஒரு வார்த்தையாகம். இவற்றில்

F என்பது – Friends என்பதை குறிக்கும்.
L என்பது Love என்பதை குறிக்கும்.
A என்பது – Affection என்பதை குறிக்கும்.
M என்பது – Marriage என்பதை குறிக்கும்.
E என்பது – Enemy என்பதை குறிக்கும்.
S என்பது – Siblings என்பதை குறிக்கும்.

இந்த FLAMES கேம் எப்படி விளையாடணும்னா? நம்மளோட பெயர் மற்றும் நமக்கு பிடித்தவரின் பெயர் இரண்டையும் ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். பின்பு இந்த இரண்டு பெயரிலும் உள்ள பொதுவான எழுத்துக்களை அடித்துவிட வேண்டும். பின்பு மீதமுள்ள எழுத்துக்களை எண்ணிக்கொள்ளுங்கள்.

உதாரணம்:

Akshata and Ayush ஆகிய பெயருக்கு நாம் FLAMES Calculation செய்து பார்ப்போம்.

இவற்றில் பொதுவான எழுத்துக்கள் என்றால் ASH ஆகிய எழுத்துக்கள் தான் அதனை நாம் அடித்து கொள்வோம். பின் மீதமுள்ள எழுத்துக்களை எண்ணினால் 6 எழுத்துக்கள் வருகிறது. 6 வைத்து FLAMES என்ற வார்த்தையை அடிக்க வேண்டும். அதாவது FLAMES என்ற வார்த்தையில் 6 எழுத்துக்கள் இருக்கும். 6-ஐ வைத்து FLAMES வார்த்தையை ஒவ்வொரு எழுத்துக்களாக எண்ணி ஆறு என்ற எண் வரும் போது அந்த எழுத்தை அடிக்க வேண்டும். இவ்வாறு இறுதிவரை எழுத்துக்களை எண்ணி FLAMES வார்த்தையை அடிக்க வேண்டும். இவற்றில் இறுதியாக வரும் எழுத்து தான் உங்கள் உறவுக்கு என்ன அர்த்தம் என்பதை சொல்லும். அப்படி நான் Akshata and Ayush ஆகிய பெயருக்கு FLAMES Calculation செய்தபோது இறுதியாக M என்ற எழுத்து தான் விடுபட்டது. M என்ற எழுத்தின் அர்த்தம் Marriage.

இது மாதிரி விளையாட்டு தனமாக இந்த கேமை விளையாண்டு இருப்போம். உங்களுக்கு இந்த ஃப்ளேம்ஸ் கால்குலேட்டர் எப்படி கால்குலேட்டர் பண்ணனும்னு தெரியவில்லை என்றால் ஒன்றும் வருத்தப்படாதிங்க. உங்களுக்காக கீழ் ஃப்ளேம்ஸ் கால்குலேட்டர் கொடுத்திருக்கோம். அவற்றில் உங்கள் பெயரையும், உங்களுக்கு பிடித்தவரின் பெயரையும் போட்டு கால்குலேட் பண்ணிப்பாருங்க. நன்றி வணக்கம்.

Love Calculator FLAMES Game

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்