காகத்திற்கு படைக்க வேண்டிய பொருட்கள்..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பார்க்கப்போவது என்னவென்றால் மிகவும் சுவாரசியமான ஒரு ஆன்மிக தகவல் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அது என்னவென்றால் காகத்திற்கு படைக்க வேண்டிய பொருட்களை பற்றித்தான்.
பொதுவாக காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி உண்டு. ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி காகத்திற்கு உண்டாம். அப்படிப்பட்ட காகத்திற்கு எந்த உணவுகளை படைத்தால் நமக்கு நன்மை நடக்கும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காகத்திற்கு எந்த உணவு பொருளை வைப்பதால் நமது கஷ்டங்கள் தீரும்:
முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி கொண்ட காகத்திற்கு படைக்க வேண்டிய உணவு பொருட்கள் பற்றி பார்க்கலாம்.
உலர்திராட்சை:
அந்தவகையில் முதலாவதாக உலர்திராட்சையை உங்களுடைய கைகளால் வைப்பதால் நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து பாவங்களும் நீங்கி உங்களுக்கு புன்னியம் வந்து சேரும். இதனால் நமது வாழக்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தீர்ந்துவிடும்.
மேலும் நமது இல்லத்திற்கு செல்வம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
நல்லெண்ணெய் :
அடுத்து பொதுவாக காகத்திற்கு சாதம் வைக்கும்போது அதனுடன் நல்லெண்ணெயை சிறிதளவு சேர்த்து வைத்தால் சனிபகவானின் பார்வையினால் வரக்கூடிய தீமைகள் குறையும் என்று கூறப்படுகின்றது.
எள்ளு :
காகம் சனிபகவானின் வாகனம் என்பதால் பொதுவாக காகத்திற்கு சாதம் வைக்கும்போது அதனுடன் எள்ளை சேர்த்து வைத்தால் சனிபகவானின் அருள் நிறைவாக கிடைக்கும். மேலும் நமது வீட்டிற்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
காகத்திற்கு இந்த பொருட்களை மறந்தும் வைத்துவிடக்கூடாது :
பொதுவாக காகத்திற்கு மனிதர்களைப் போல தீட்டை கடைபிடிக்கிற வழக்கம் உண்டு என்றால் உங்களால் நம்பமுடியுமா.? உதாரணமாக ஒரு காக்கை இறந்து விட்டால் அதனை சுற்றி மற்ற காக்கைகள் கூடி கூச்சலிடும். பின்னர் அவை அனைத்தும் ஒரு நீர்நிலைக்கு சென்று தலைமுழுகி குளிக்கும் இதனை சில இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
இப்படி மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கிற வழக்கம் கொண்டுள்ள காகத்திற்கு தீட்டுடன் உணவு அளிக்கக்கூடாது.
பழைய சாப்பாடு :
அடுத்து காகத்தின் உருவத்தில் நமது முன்னோர்கள் வருவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட காகத்திற்கு நமது வீட்டில் மிச்சமான அல்லது பழைய சாப்பாடுகளையோ வைப்பது தவறு.
அசைவ உணவுகள் :
பொதுவாக காகத்திற்கு உணவு அளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் காகத்திற்கு அசைவ உணவுகளை வைத்துவிடவே கூடாது.
இதையும் பாருங்கள் => காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |