இரவில் அடுத்தவர்களுக்கு கொடுக்க கூடாத பொருட்கள்..! ஏன் கொடுக்க கூடாது தெரியுமா.?

Advertisement

இரவில் கொடுக்க கூடாத பொருட்கள்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இரவில் கொடுக்க கூடாத பொருட்கள் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க. பொதுவாக, அக்காலத்தில் கூறிய சில விஷயங்களை நாம் பின்பற்றி வருகிறோம். அதில் ஒன்று தான் இரவில் கொடுக்க கூடாத பொருட்கள். அதாவது பொழுது சாயும் வேளையில் அல்லது இரவு பொழுதியில் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை மட்டும் நாம் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு கொடுக்க கூடாது என்று கூறியிருப்பார்கள்.

இந்த பொருட்களை இரவு வேளையில் கொடுத்தால் வீட்டிற்கு நல்லது அல்ல என்று கூறுவார்கள். அதாவது, வீட்டில் பணக்கஷ்டம் போன்ற செல்வம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும் என்று கூறுவார்கள். எனவே, நீங்களும் தெரிந்துகொள்ளும் வகையில் இரவில் கொடுக்க கூடாத பொருட்கள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.

தப்பி தவறிகூட இந்த உணவை இரவில் சாப்பிட்டுவிடாதீர்கள்..?

இரவில் இந்த பொருட்களை மட்டும் பிறருக்கு கொடுக்காதீர்கள்:

  • எண்ணெய் பொருட்கள்
  • கடுகு 
  • எள் 
  • பால் மற்றும் தயிர் 
  • இரும்பு பொருட்கள்
  • உப்பு 
  • ஊசி 
  • நூல் 
  • பணம் 
  • மஞ்சள் அல்லது மஞ்சள் தூள் 
  • பூண்டு 
  • அரிசி 

இதுபோன்ற பொருட்களை இரவில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் வந்து கேட்டாலும், இல்லை என்று கூறி காலையில் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுங்கள். முக்கிமாக எதற்காக இரவில் இந்த பொருட்களை எல்லாம் கொடுக்க கூடாது என்று அவர்களுக்கு கூறுங்கள்.

இரவில் ஏன் இந்த பொருட்களை பிறருக்கு கொடுக்க கூடாது.?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. முதலில் ஆன்மீக காரணம் பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் கூறியுள்ள அனைத்து பொருட்களும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது. அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த பொருட்கள் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும்போது, பொருட்களை கொடுப்பவர்கள் வீட்டில் கிரகத்தின் நிலையால் என்ன மாதிரியான சூழ்நிலை நிலவுகிறதோ அந்த சூழ்நிலை பொருள் வாங்குபவர்களின் வீட்டிற்கு வந்துவிடும் என்பது நம்பிக்கை. அது சுப பலன்களாக இருந்தாலும் சரி அசுப பலன்களாக இருந்தாலும் சரி அது ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்று விடும். அதுமட்டுமில்லாமல், அந்தி சாயும் வேளையில் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாக்சம் உண்டாக்கும். அந்நேரத்தில் இதுபோன்ற பொருட்களை கொடுத்தால் வீட்டில் செல்வ செழிப்பு என்பதே இருக்காது.

ஆன்மீகத்தை தவிர்த்து மற்றொரு காரணம் ஒன்று உள்ளது. அதனை பற்றி இங்கு பார்க்கலாம். அக்காலத்தில் எல்லாம் கரண்ட் என்பதே இருக்காது. இதனால், இதுபோன்ற பொருட்களை பிறருக்கு கொடுக்க மாட்டார்கள். அதாவது, எண்ணெய், பால் போன்ற வழவழப்பு தன்மை உள்ள பொருட்களை இரவில் கொடுத்தால் கைத்தவறி கிழே கொட்டி விட்டால் யாரேனும் தெறியாமல் மிதித்து வழுக்கி விழுவார்கள். அதேபோல், ஊசி, உப்பு, இரும்பு பொருட்கள் போன்ற பொருட்களை கொடுக்க மாட்டார்கள். பிறர் காலில் பட்டு காயம் ஆகும் என்பதால் இதனை கொடுக்க மாட்டார்கள். முக்கியமாக பணம், பணம் கொடுத்தால் இருட்டில் தெரியாமல் கிழே விழுந்து விடும். விழுந்தால் கூட தேட முடியாது என்பதற்காக கொடுக்க மாட்டார்கள். எனவே, அக்காலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இதனால் தான் இரவில் இந்த பொருட்களை கொடுக்காமல் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

இதை மட்டும் தானமாக கொடுத்தீர்கள் என்றால் அவ்ளோ தான்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement