வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கால்விரல் இப்படியா அதிர்ஷ்டசாலி நீங்க..!

Updated On: February 12, 2024 1:55 PM
Follow Us:
Foot Fingers Astrology in Tamil
---Advertisement---
Advertisement

கால்விரல் இப்படியா அதிர்ஷ்டசாலி நீங்க..! Foot Fingers Astrology in Tamil..!

அனைவருக்கும் வணக்கம்.. கட்டை விரல் அனைத்திற்கும் முதன்மையான விரல் என்று சொல்வார்கள். குறிப்பாக பெண்களுக்கு கால் கட்டை விரலுக்கு அருகில் இருக்கும் விரல் நீளமாக இருந்தால் அந்த நல்லதா? அல்லது கெட்டதா?. என்ன திறமை, என்ன குணம், அதிர்ஷ்டமாக, துரதிஷ்டமா என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க. ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

சாமுத்திரிகா லட்சணம், அங்க லட்சணம், கை ஜோதிடம், உடல் அமைப்பு இதனை வைத்து பலவிஷயங்கள் சொல்லப்படுகிறது. இவற்றில் பெண்களுடைய கால் கட்டை விரல் அருகில் இருக்கக்கூடிய விரல் பெரிதாக இருந்தால் என்ன பண்பு, என்ன குணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா

பெண்களுக்கு கால் கட்டை விரலுக்கு அருகில் இருக்கும் விரல் பெரிதாக இருந்தால் என்ன பலன்?

Foot Fingers

பொதுவாக இவ்வாறு கால் விரல் அமைப்பு இருக்கும் பெண்கள் மிகவும் திறமையாக இருப்பார்கள்.

மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள். நிறைய ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் ஒரு நாளும் சோம்பேறியாக இருக்க மாட்டார்கள். என்றும் சோர்வாக இருக்க மாட்டார்கள், குறிப்பாக இவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் இருக்காது.

இவர்கள் என்றும் சுறுசுறுப்பாகவாவும், ஆற்றலுடனும் இருப்பார்கள்.

இவர்களை பார்க்கும் போதே நமக்கு ஒரு சந்தோசம், மகிழ்ச்சி ஏற்படும். இது போன்ற அமைப்புகளை கொண்டவர்கள் தான் இவர்கள்.

மேலும் இவர்களிடம் புத்தி கூர்மை அதிகமாக இருக்கும். ஒரு விஷயத்தை இவர்களிடம் சொன்னால் அதனை எளிதாக புரிந்துக்கொள்ளும் குணாதிசயம் இவர்களும் இருக்கும்.

முடிவெடுக்கும் திறன் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அதாவது ஒரு விஷயத்தில் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார்கள்.

ஒரு விஷயத்தில் இருக்கும் நல்லது கெட்டதை தனி தனியாக பிரித்து அறிந்து செயல்படும் திறன் இவர்களிடம் இருக்கும்.

யாரையும் இவர்கள் மிக எளிதாக நம்பிவிட மாட்டார்கள்.

இவர்களிடம் பேச்சு திறமை அதிகமாக இருக்கும், இதன் காரணமாகவே வாயாடி என்ற பெயரை மற்றவர்களிடம் இருந்து பெறுவார்கள்.

ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, ஒரு அலுவலகமாக இருந்தாலும் சரி இவர்களை கேட்டு தான் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று தயாராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இவர்களிடம் திறமை இருக்கும்.

இது போன்ற அமைப்பு கொண்ட ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்துகொண்டீர்கள் என்றால் ஒரு குடும்பத்தை சரியான முறையில் வழிநடத்தும் வல்லமை இவர்களிடம் இருக்கும்.

இது போன்ற அமைப்பு கொண்ட ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்வது என்பது மிகவும் அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சைவம், அசைவம் இரண்டில் நீங்கள் யார்? அப்படின்னா உங்கள் குணம் இப்படி தான் இருக்கும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now