வெள்ளிக்கிழமை ராகு காலம் | Rahu Kalam Durga Pooja Benefits in Tamil
வணக்கம் ஆன்மிகம் பதிவின் இனிமையான நேயர்களே. இன்று இந்த பதிவில் வெள்ளிக்கிழமை ராகு காலம் பற்றிய தகவல்களை பார்க்கபோகிறோம். நாம் எந்தவொரு நல்ல செயலையும் தொடங்குவதற்கு முன் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பார்த்துவிட்டு தான் சுப காரியங்களை தொடங்குகிறோம். ராகு காலம் என்பதை கெட்ட சகுனம் என்று கூறுகிறார்கள். ராகு காலத்தில் எந்த வேலையை தொடங்கினாலும் அது தடைபடுவதால் அது கெட்டகாலமாக பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ராகு காலம் என்ன பலன் | ராகு கால துர்க்கை வழிபாடு:
நம் மக்கள் ராகு காலத்தில் எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். காரணம் அதை கெட்ட சகுனமாக பார்க்கிறார்கள். ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ராகு காலத்தில் புதிய முயற்சிகள், திருமண பேச்சு வார்த்தை, புதிய தொழில் தொடங்குவது, வீடு குடிபோவது போன்ற நல்ல செயல்களை செய்யமாட்டார்கள்.
ஆனால், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது. வெள்ளிக்கிழமை ராகு கால நேரம் 10.30 மணி முதல் 12.00 மணி வரை இருக்கும். இந்த ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபடுதல் வேண்டும். இப்படி வழிபடுவதால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறுகிறார்கள்.
ராகு காலம் என்றால் என்ன |
- வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சைப்பழ தோளில் விளக்கு ஏற்றி வழிபடுதல் நல்ல பலனை கொடுக்கிறது. இந்த எலுமிச்சைப்பழ தீபம் துர்க்கை அம்மனுக்கு உகந்த தீபமாகும்.
- அதேபோல் இந்த வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையை தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகளில் செய்து வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கிறது.
- இப்படி வழிபடுவதால், திருமண தடை அகலும்.
- குழந்தை இல்லாதவர்கள் இந்த வழிபாடு செய்வதால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதால் வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடும். செல்வம் சேரும்.
- திருமணம் ஆகாத பெண்கள் இந்த வழிபாடு செய்வதால் திருமண தடை அகலும்.
- இதுபோன்று வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட்டு வருவதால் மாங்கல்ய பாக்கியம் பெருகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |