கஜகேசரி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொன்னான நேரம்தான்..!

Advertisement

Gaja Kesari Yoga Benefits in Tamil

பொது வகை இந்து சமயத்தில் கூறப்படும் ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசிகளை மாற்றுவதன் மூலம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இது மனித வாழ்க்கையையும் பூமியையும் நேரடியாக பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. அதேபோல் தான் தற்பொழுது வியாழன் கிரகம் மேஷ ராசியை கடக்கிறது மற்றும் சந்திரன் அக்டோபர் 28 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. ஜோதிடத்தில், இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த ராஜயோகத்தின் பலன் 12 ராசிக்காரர்களுக்கும் பலனை அளித்தலும் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அவை எந்தெந்த அதிர்ஷ்ட ராசியினர் யார் என்றும் அவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் இந்த பதிவில் பார்ப்போம்.

துலாமில் பெயர்ச்சியாகும் புதன் இனிமேல் இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம்தான்

கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டக்காரர்களாக மாற போகும் 3 ராசிக்காரர்கள்:

வியாழன் மற்றும் சந்திரன் சேர்க்கையால் நிகழ போகும் கஜகேசரி ராஜயோகத்தால் மிகவும் நல்ல பலன்களை அனுபவிக்க போகும் 3 ராசிக்காரர்கள் யார் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக காணலாம் வாங்க.

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் மிக மிக நல்ல பலனை அளிக்கும். ஏனெனில் மேஷ ராசியின் லக்ன வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது.

எனவே, இந்த நேரத்தில் உங்கள் வேலை மற்றும் வியாபாரம் பிரகாசமாக இருக்கும். இது தவிர, திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும், மேலும் நிதி ஆதாயம் கிடைக்கும்.

மேலும் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். திட்டங்களில் வெற்றி உண்டு. புதிய முதலீடு மூலம் லாபம் கிடைக்கும்.

மீனத்தில் நுழையும் ராகுவால் திடீர் பண வரவை பெற போகும் 3 ராசிக்காரர்கள்

மிதுன ராசி:

மிதுன ராசி

இந்த கஜகேசரி ராஜயோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக அளவு நல்ல பலன்களை அளிக்க போகின்றது. அதாவது கஜகேசரியின் ராஜயோகத்தால் வருமானம் கூடும்.

ஏனெனில் இந்த ராஜயோகமானது உங்கள் ராசியின் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாக போகின்றது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். அதே நேரத்தில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கடக ராசி:

கடக ராசி

இந்த ராசியினருக்கு கஜகேசரி ராஜயோகம் சாதகமாக இருக்கலாம். ஏனெனில் இந்த யோகம் உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் அமையப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.

மேலும் வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வெளியிடத்தில் மரியாதை கூடும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் ஏதேனும் சமய அல்லது சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

கடன் தீர்ந்து வீட்டின் பணவரவு அதிகரிக்க 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement