கஜகேசரி யோகம் அதிர்ஷ்டம் கிடைக்க கூடிய ராசிகள்
குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் இருக்கும் போது மே 17-ம் தேதி சந்திரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார. இந்த பெயர்ச்சியால் குரு மற்றும் சந்திரன் நேருக்கு நேர் சந்திக்க போகிறார்கள். இதனால் கஜகேசரி யோகம் உருவாகப்போகிறது. இந்த யோகமானது எல்லா ராசிகளிலும் தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது. வை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகத்தல் எல்லா செயல்களும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும். இந்த யோகத்தால் உங்களின் வருமானம் ஆனது அதிகரிக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த கால கட்டத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் முதலீடு செய்ய வேண்டுமென்று நினைத்தால் இந்த காலக்கட்டம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்து வைத்திருந்தால் அதிலிருந்து உங்களுக்கு நல்ல தொகை கிடைக்கும்.
செவ்வாய் பகவானால் திடீரென்று லாபத்தை பெற கூடிய ராசிகள்
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகமானது எல்லா செயல்களிலும் பலன்களை அள்ளி தர போகிறது. அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வு கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக பெண்டிங்கில் இருந்த வேலை முடிவுக்கு வரும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களை தேடி பல வழிகளில் பணம் வரும். இந்த காலகட்டத்தில் பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்:
கஜகேசரி யோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானாதாக இருக்கும். இந்த ராசியில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக திருமண வரன் கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டு இருந்தால் இந்த நேரத்தில் உங்களுக்கு திருமண வர கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் ஆனது அதிகரிக்கும். இதனால் வருமானமும், லாபமும் அதிகரிக்கும். உங்களுடைய ஆளுமை திறனை பார்த்து மற்றவர்கள் வியக்க கூடிய வகையில் இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |