சூரியன் மற்றும் ராகு சேர்க்கை | Gajakesari Yoga Palangal 2024
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருகின்றன. அப்படி இருக்கும் 12 ராசிகளுக்கும் 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. இதுபோல ராசிகளில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் மாற்றம் நடந்து கொண்டு தான் இருக்கும். இப்படி கிரகங்கள் ஒவ்வொரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது நன்மைகள் தீமைகள் என்று வரும்.
அந்த வகையில் மார்ச் 14 ஆம் தேதி அன்று சூரியன் மீன ராசியில் நுழைந்தார். ஆனால் ஏற்கனவே ராகு மீனராசியில் தான் இருக்கிறார். இப்படி சூரியனும் ராகுவும் இணைவதால் சில ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனும் ராகுவும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாக உள்ளது. எனவே இந்த கஜகேசரி யோகத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வீட்டின் கதவை தட்டப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!
சனியின் உதயத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் அடைமழை பணமாக கொட்டப்போகிறது..
சூரியன் ராகு சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம்..! அதிர்ஷ்டம் யாருக்கு..?
மிதுன ராசி:
சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகத்தால், நீண்ட நாட்களாக முடியாமல் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இந்த நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் தொடங்கும் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நேரமாக இருக்கும்.
மகர ராசி:
சூரியனின் இந்த மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. இதனால் மகர ராசியில் பிறந்தவர்கள் எதை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம். இந்த கஜகேசரி யோகத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டினாள் இன்னும் நன்றாக இருக்கும்.
துலாம் ராசி:
இந்த கஜகேசரி யோகத்தால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக காணப்படும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி சூழ்ந்து இருக்கும். நீங்கள் தொடங்கும் செயல்களை திட்டமிட்டு செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி..! 12 ராசிகளும் எப்படி இருக்கும்..
ரிஷப ராசி:
சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கப்போகிறது. இந்த நேரத்தில் இழந்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. கஜகேசரி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் கௌரவமாக இருப்பீர்கள். இது உங்களுக்கு பொன்னான நேரமாகும்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த கஜகேசரி யோகம் பல நல்ல பலன்களை அள்ளித்தரப் போகிறது. படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |