கஜகேசரி யோகம் மே 2025
மே 15, 2025 அன்று புதனின் ராசியான மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனுடன், சந்திரன் மே 29, 2025 அன்று பிற்பகல் 01:36 மணிக்கு மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சந்திர பகவானிடம் குரு பகவான் இணைவதால் கஜ கேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை ஆனது சிறப்பமாக இருக்க போகிறது, அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகத்தால் அவர்களின் வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடக்கும். உங்களின் வாழ்க்கையில் இதுவரை மகிழ்ச்சி ஏமாற்றும் நிம்மதி இல்லாமல் இருந்தால் இந்த நேரமானது உங்களுக்கு உகந்ததாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியானது அதிகரிக்கும். நீங்கள் ரொம்ப நாளாக மனக்குழப்பத்தில் இருந்தால் இந்த காலத்தில் இதிலிருந்து வெளியே வருவீர்கள். இந்த ராசிக்காரர்கள் யாரேனும் படிப்பவர்களாக இருந்தால் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் பாராட்டை வாங்குவீர்கள். பணம் ஆனது கையில் இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் விழா உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் எல்லா செயல்களுக்கும் பெற்றோர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.
தூக்கத்தை விரும்பும் ராசிக்காரர்கள் யார் யாருன்னு தெரியுமா?
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகமானது நேர்மறையான பலன்களை அள்ளி தரப்போகிறது. உங்களின் கடின உழைப்பு ஒரு புறம் இருந்தாலும் அதிர்ஷ்டம் கூட இருக்கும். இதனில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். நீண்ட நாட்களாக முடிவுக்கு வராமல் ஏதேனும் வேலை இருந்தால் இந்த நேரத்தில் அவை முடிவுக்கு வந்துவிடும்.
நீங்கள் ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலையை மாற்ற நினைத்தால் இந்த நேரத்தில் நீங்கள் மாற்றி கொள்வதற்கு உகந்த நேரமாக இருக்கிறது. மேலும் இந்த நேரத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது . இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பாரம்பரிய சொத்துக்களில் இருந்த பிரச்சனை நீங்கி முடிவுக்கு வரும். திடீரென்று உங்களுக்கு வருமானம் ஆனது அதிகரிக்கும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி தருவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகமானது இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் சிறப்பாக இருப்பார்கள். உங்களுடைய எல்லா செயல்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் யாரேனும் மற்றவர்களுக்கு கடனாக கொடுத்தீர்கள் என்றால் இந்த காலத்தில் உங்களுக்கு திரும்பி வரும். நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் உங்களின் துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பா உயர்வு கிடைக்கும்.இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்களின் அந்தஸ்து ஆனது உயரும். வியாபாரம் செய்பர்களாக இருந்தால் இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் மூலம் வருமானமும் உயரும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |