கஜலட்சுமி ராஜயோகம் | Gajalakshmi Rajyog July 2025 in Tamil
ஆன்மீகத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசியை குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை மாற்றி கொண்டே இருக்கும். அப்படி மாற்றி கொண்டே இருக்கும் பொழுது 12 ரசிகளிலும் அதனுடைய தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலனை அள்ளி தரக்கூடும். அந்த வகையில் சுக்கிரன் ஜுலே 26-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மிதுன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கையானது கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கமானது எல்லா ராசிகளிலும் இருந்தாலும் 3 ராசிகள் ராஜவாழ்க்கை கிடைக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
கும்பம்:
குரு மற்றும் சுக்கிர சேர்க்கையானது கும்ப ராசியில் 5-வது வீட்டில் நடக்கவிருக்கிறது. இந்த ராசியில் படிக்கும் மாணவர்கள் இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். காதல் வாழ்க்கை ஆனது சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் யாரை காதலிக்கிறீர்களோ அவரக்ளை திருமணம் செய்வதற்கு கைகூடும். பணவரவு ஆனது சிறப்பாக காணப்படும். இதன் மூலம் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நல்ல லாப தொகையானது கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிர சேர்க்கை ஆனது 2-வது வீட்டில் நடக்கவிருக்கிறது. இந்த கஜகேசரி யோகத்தால் வருமானம் ஆனது அதிகமாக காணப்படும். இதன் மூலம் உங்களின் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஏதேனும் நீங்கள் மற்றவர்களுக்கு கடனாக பணம் கொடுத்திருந்து நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்தால் அந்த பணமானது கைக்கு கிடைக்கும். படிக்கும் மாணவர்கள் இருந்தால் இந்த நேரத்தில் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்கள் புதிதாக ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் அதனை இந்த நேரத்தில் செயல்படுத்தலாம்.
துலாம்:
குரு சுக்கிர சேர்க்கையானது துலாம் ராசியில் 9-வது வீட்டில் நடக்கவிருக்கிறது. இந்த சேர்க்கையினால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை ஆனது சிறப்பாக இருக்க போகிறது. வேலை சம்மந்தமாக வெளியே செல்வீர்கள். இதனால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வமானது அதிகரிக்கும். உங்களின் திருமண வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழை இருந்தால் அதுவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். பணியிடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரக்கூடும். அதுமட்டுமில்லாமல் பணியில் உங்களுக்கான செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












