கஜகேசரி யோகம்
ஜோதிஷ சாஸ்திரம் படி வியாழன் மற்றும் சந்திரன் ஏதோ ஒரு ராசியில் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. பொதுவாக ஒவ்வொரு யோகமும் ஒவ்வொரு ராசியினருக்கு வெவ்வேறு விதமான பலன்களை தருகிறது. அந்த வகையில் கஜகேசரி ராஜயோகம் எல்லாம் ராசியினருக்கு நல்ல பலனை அளித்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலன்களை அல்லி தர போகிறது. அவை என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
கஜகேசரி ராஜயோகம் பலன்கள்:
மீனம்:
கஜகேசரி ராஜயோகம் மீன் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல மகிழ்ச்சியை அள்ளி தர போகிறது. புதிதாக சொத்து, வீடு, நிலம் போன்றவை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் உங்களுக்கு லாபத்தை அதிகமாக தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சனி பகவான் வக்ரமாவதால் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்..!
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அதிர்ஷ்டத்தை தர கூடியதாக இருக்கும். பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முதலீடு செய்வதற்கு இந்த கால கட்டம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். பணியிடம் சவால் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் வெற்றி அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுருந்தால் அவை இந்த கால கட்டத்தில் நீங்கள் செய்யலாம். தொழில் செய்யும் இடத்தில் வெற்றியை அடைவீர்கள். வியாபாரம் செய்வர்களுக்கு இந்த கால கட்டத்தில் லாபத்தை அள்ளி தரும். திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வ செழிப்போடு வாழ்வதற்கு ஏலக்காய் மட்டும் போதும்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |