வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்..!

Updated On: September 24, 2024 7:07 PM
Follow Us:
கணபதி ஹோமம் பலன்கள்
---Advertisement---
Advertisement

கணபதி ஹோமம் பலன்கள் | Ganapathi Homam Benefits in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பலன்கள் பற்றி (Ganapathi Homam Benefits in Tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். கணபதி ஹோமம் புதிய தொழில் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்கும். மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

கணபதி ஹோமம் செய்ய தேவையான பொருட்கள்=>

சரி இப்போது கணபதி ஹோமம் பலன்கள் (Ganapathi Homam In Tamil) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

நோய்கள் மற்றும் தொழில் தடைகள் நீங்க கணபதி ஹோமம் பலன்கள்:

வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.

திருமண தடை நீங்க கணபதி ஹோமம் பலன்கள்:

கணபதி ஹோமம் (Ganapathi Homam In Tamil) செய்வதினால் திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், செல்வ செழிப்பும் வந்து சேரும்.

அக்னி

ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும்.

கல்வி

குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள், படிப்பது மனதில் நிற்க்கும்.

இறை வழி பாதை

இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும்.

எந்த ஹோமம் செய்தால் என்ன பலன்

துர்மரணங்கள், விபத்துக்கள்

ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும்.

தனசேர்க்கை – கணபதி ஹோமம் பலன்கள்

கணபதி ஹோமம் செய்வதினால் நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம் ஏற்படும்.

மேன்மை

கணபதி ஹோமம் செய்வதினால் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் மேன்மையுண்டாகும்.

குடும்ப பிரச்சனைகள்

ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பு சுவராக கணபதி ஹோமம் இருக்கும்.

நேர்மறை சக்திகள் (பாசிடிவ் எனர்ஜி)

கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் (நெகட்டிவ் எனர்ஜி) வெளியேறி மாறாக நேர்மறை சக்திகள்(பாசிடிவ் எனர்ஜி) அதிகமாகும்.

இதுபோன்ற ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> ஆன்மீக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now