கருடன் கனவில் வந்தால் | Garudan Kanavu Palan
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கருடன் கனவில் வந்தால் என்ன பலன் (Garudan Kanavu Palangal in Tamil) என்ன பலன் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருதத்தில் கருடன் என்றால் பெரிய சுமையை சுமப்பவன் என்று அர்த்தம் ஆகும். தெய்வ அம்சம் நிறைந்த கருடன் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ளவோம் வாங்க.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வகையில் கருடன் கனவில் வந்து இருப்பார். அதாவது, ஒருவற்கு கருடன் பறப்பதுபோல் கனவு வந்திருக்கும், ஒருவருக்கு கருடன் தாக்குவது போல் கனவு வந்திருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு கருடனும் பாம்பும் சண்டையிடுவது போல் கனவு வந்திருக்கும். இதுபோன்ற பல வகையாக கருடன் கனவில் வந்திருப்பார். எனவே, உங்களுக்கும் இதுபோன்ற கனவு வந்திருந்தால் அதற்கான அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கருடன் கனவில் வந்தால் என்ன பலன்:
கருடனை எந்த கிழமையில் தரிசித்தால் என்ன பலன்..!
மேலே பறப்பதுப்போல் கனவு:
கருடன் மேலே பறப்பதுப்போல் கனவு வந்தால், நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற்றமான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
கருடனை பார்த்து பயப்புடுவது போல் கனவு:
கருடனை பார்த்து பயப்புடுவது போல் கனவு வந்தால், நீங்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்பதையும் , எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
கருடன் தாக்குவது போல் கனவு:
கனவில் கருடன் உங்களை தாக்குவது போல் கனவு வந்தால், நீங்கள் கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்துகிறது. அதாவது, உங்களுக்கு உடல் ரீதியாகவும், பண ரீதியாகவும் கஸ்டங்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை குறிக்கிறது.
கருடன் கூட்டில் இருப்பது போல் கனவு:
உங்கள் கனவில் கருடன் கூட்டில் இருப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைக்க போவதை உணர்த்துகிறது.
கருடன் பாம்புடன் சண்டை இடுவதுபோல் கனவு:
கருடன் பாம்புடன் சண்டை போடுவது போல் கனவு வந்தால் நீங்கள், கடும் கோபத்துடன் இருப்பதையும், அதனை தவிர்த்துக்கொள்ள வேண்டியும் அறிவுறுத்திருக்கிறது.
கும்பாபிஷேகத்தின் போது பருந்து ஏன் பறக்கிறது தெரியுமா.? இதுதான் காரணம்..!
கருடன் வானத்தில் வட்டமிடுவது போல் கனவு:
நீங்கள் கருடன் வானத்தில் வட்டமிடுவது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிப்பதற்கான வழி வரும் என்பதை உணர்த்துகிறது.
கருடனை வேறொருவர் கொல்வது போல் கனவு:
உங்கள் கனவில் யாரோ ஒருவர் கருடனை கொல்வது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகளும், துரதிர்ஷ்டமான சம்பவங்களும் நிகழப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
கருடன் தலையில் அமர்ந்து இருப்பது போல் கனவு:
கனவில் உங்கள் தலையில் கருடன் அமர்ந்து இருப்பது போல் கனவு வந்தால், உங்களுக்கு கூடிய விரைவில் உயர்ந்த பதவி கிடைக்க போகிறது என்பதை உணர்த்துகிறது. இருப்பதை விட உயர்ந்த இடத்திற்கு போக போவதை உணர்த்துகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |