Seeing Glass Bangles in Dream in Tamil | கண்ணாடி வளையல் கனவில் வந்தால்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கண்ணாடி வளையல் கனவில் வந்தால் (Seeing Glass Bangles in Dream in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கனவு என்பது வரக்கூடிய ஒன்று. கனவுகள் பலவிதமான வகையில் வரும். அவற்றில் ஒரு சில கனவுகள் மட்டுமே நமக்கு நினைவில் இருக்கும். ஒரு சில கனவுகள் நினைவில் இருக்காது. ஆனால் நாம் காணும் கனவுகள் அனைத்தும் நம் எதிர்காலத்தில் நமக்கோ அல்லது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கோ ஏதோ ஒன்று நடக்க போகிறது என்பதையே குறிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு பலனை கொடுக்கிறது. ஆனால் நமக்கு வரும் கனவுகளின் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. கனவுகளின் அர்த்தத்தை பாட்டியிடம் தான் கேட்டு தெரிந்து கொள்வோம். அதேபோல், கண்ணாடி வளையல் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெண் பார்ப்பது போல் கனவு கண்டால்..?
கண்ணாடி வளையல் கனவில் வந்தால் என்ன பலன்..?
கண்ணாடி வளையலை கனவில் கண்டால், சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் கைக்கூடும் என்பதை குறிக்கிறது. மேலும், எதிர்மறையான எண்ணங்கள் வரவிருப்பதையும், மனதில் உள்ள அனைத்தையும் வெளிப்படையாக சொல்லாமல் பிறரிடம் கூச்சப்பட்டு கொண்டு கூறாமல் இருப்பதையும் குறிக்கிறது. அதுமட்டுமில்லாமல் உங்களின் மிப்பெரிய ஆசைகளும் குறிக்கோளுகளும் நிறைவேற இருப்பதையும் குறிக்கிறது.வளையல்கள் நிறைய இருப்பதை போல் கனவு கண்டால்:
வளையல்கள் நிறைய இருப்பதை பார்ப்பது போல் கனவு கண்டால், துரதிர்ஷ்டம் வரவிருப்பதையும், பிறரிடம் மரியாதையை இழக்க இருப்பதையும், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் விரோதம் வர இருப்பதையும், பேசும் வார்த்தைகளை கவனமாக பேச அறிவுறுத்தியும், ஆன்மீக சிந்தனை அதிகரிக்க இருப்பதையும் குறிக்கிறது.
உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன பலன்…!
பச்சை நிற கண்ணாடி வளையலை கனவில் கண்டால்:
பச்சை நிற கண்ணாடி வளையல் கனவில் வந்தால், வாழ்வில் வெற்றி அடைய போவதையும், தனது குறிக்கோளை அடைய தன்னமிக்கையாக உழைக்க இருப்பதையும், அனைவரிடமும் இறக்க குணத்துடன் நடந்து கொள்வதையும் குறிக்கிறது.
சிகப்பு நிற கண்ணாடி வளையலை கனவில் கண்டால்:
சிகப்பு நிற வளையலை கனவில் கண்டால், உங்களுக்கு புதிய சுதந்திரம் கிடைக்கப் போவதையும் மற்றும் மனசோர்வும் உடற்சோர்வும் வர இருப்பதையும் குறிக்கிறது.
கண்ணாடி வளையல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கண்ணாடி வளையல் உடைவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது உறவினர்களின் விபத்து அல்லது உடல்நல பிரச்சனை ஏற்பட போவதை குறிக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |