Gokulashtami Pooja in Tamil
பொதுவாக இந்து மதத்தில் எண்ணற்ற பண்டிகைகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகையும் ஏதோ ஒரு ஆன்மீக அர்த்தத்தினை குறிக்கும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் நாளை கோகுலாஷ்டமி என்றும், கிருஷ்ண ஜெயந்தி என்றும் சொல்லக்கூடிய பண்டிகை ஆனது நாளைய தினம் ரோகிணி நட்சத்திரத்தில் வருகிறது. எனவே நாளை கொண்டாடப்படக்கூடிய கோகுலாஷ்டமி அன்று 12 ராசியினரும் கிருஷ்ணருக்கு இத்தகைய பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம் செல்வ செழிப்பு ஏற்படும்.
செல்வம் பெருக வழிமுறைகள்:
மேஷ ராசி:
ராசியில் முதல் ராசியாக மேஷ ராசிக்காரர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய வக்கிரம் மற்றும் வெண்ணெயினால் செய்த இனிப்பினை வைத்து வழிபட வேண்டும்.
ரிஷப ராசி:
ரிஷிப ராசிக்காரர்கள் வெண்ணெயினால் செய்யப்பட்ட லட்டு செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வதன் மூலம் இதுநாள் வரையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும்.
மிதுன ராசி:
கோகுலாஷ்டமி அன்று மிதுன ராசிக்காரர்கள் சந்தனத்தால் அபிஷேகம் செய்து, கெட்டி தயிர் மற்றும் இனிப்பு செய்து வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவெறி பண வரவு உண்டாகும்.
கடக ராசி:
கடக ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்று வெள்ளை நிற வக்கிரம் மற்றும் குங்கும பூ சேர்த்த பால் வைத்து வழிபடுவது நினைத்தை நடக்க வைக்கும்.
சிம்ம ராசி:
நாளைய தினத்தில் இளஞ்சிவப்பு நிறத்தினால் ஆடை அலங்காரம் செய்து வெண்ணெய் மற்றும் இனிப்பு பலகாரங்களை வைத்து பூஜை செய்வது நல்லது.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்கள் பச்சை நிற ஆடையால் அலங்காரம் செய்து பாலில் செய்யப்பட்ட பால்கோவாவை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
துலாம் ராசி:
கிருஷ்ண ஜெயந்தி அன்று ராசிக்காரர்கள் வெண்ணெய் மற்றும் நெய்யினால் செய்த லட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும்.
விருச்சிக ராசி:
சிவப்பு நிற ஆடை அலங்காரம் செய்து வெண்ணெய் மற்றும் தயிரினால் செய்த பிரசாத்தை வைத்து வழிபாடு செய்வது நல்லது.
தனுசு ராசி:
வில் போன்ற அமைப்பினை உடைய தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடை அலங்காரம் செய்து மஞ்சள் நிறத்தில் உள்ள இனிப்பினை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
மகர ராசி:
மகர ராசிக்காரர்கள் கோகுலாஷ்டமி அன்று நீள நிற ஆடையினால் அலங்காரம் செய்து பாலால் செய்த பாயாசம் என இதுபோன்ற இனிப்புகளை செய்து வழிபட வேண்டும்.
கும்ப ராசி:
இந்த ராசிக்காரர்கள் நெய்யினால் செய்யப்பட்ட லட்டு, நீள நிற துளசி மற்றும் நீள நிற ஆடையினால் கிருஷ்ணரை அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
மீனம் ராசி:
கடைசி ராசியான மீன ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடை அலங்காரம் மற்றும் லட்டு, குங்கும பூ, பால் பாயாசம் என இவை அனைத்தினையும் செய்து பூஜை செய்ய வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் ஒவ்வொரு ராசியினரும் பூஜை செய்து நினைத்த காரியம் நிறைவேறி செல்வ செழிப்பு மற்றும் பண வரவு பெருக வேண்டும் என்று பூஜை செய்வது நல்லது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
வீட்டில் வற்றாத பணவரவை ஏற்படுத்தும் 5 ரூபாய் கடுகு பரிகாரம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |