அட்சய திருதியை அன்று தங்கத்தை இந்த நேரத்தில் வாங்குங்கள் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பெருகும்..!

Advertisement

அட்சய திருதியை அன்று தங்கத்தை இந்த நேரத்தில் வாங்குங்கள் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பெருகும்..! Good Time for Akshaya Tritiya 2023..!

Good Time for Akshaya Tritiya 2023 – அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்த ஒரு பொருளும் குறைவில்லாமல் நிறைந்து இருக்கும் என்பது மக்களின் அயராத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் மகாலட்சுமியின் அம்சமான தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன பொருட்களை வாங்கும் போது வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் நம்பிக்கையாகும். இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பொருட்களை வாங்குகின்றன. சரி இந்த பதிவில் நாம் அட்சய திருதியை நாளன்று எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் மகாலட்சுமியின் அருள் பெருகும் என்பதை பற்றியும். தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பொருட்கள் இல்லாமல் வேறு என்னென்ன பொருட்களை வாங்கலாம் என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க சிறந்த நாள் எப்பொழுது? – Gold Buy Good Day for Akshaya Tritiya:அட்சய திருதியை

வருகின்ற ஏப்ரல் 22-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அட்சய திருதியை ஆகும்.

குரு ஓரை:

குரு ஓரை காலை 7 மணி முதல் 8 வரை தங்கம், வெள்ளி வாங்கலாம். அதன் பிறகு பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை வாங்கலாம்.

சுக்கிர ஓரை:

சுக்கிர ஓரை காலமான காலை 10 மணி முதல் 11 மணி மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம்.

அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம் வாங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 6 பொருட்கள் வீட்டில் குறையக்கூடாது பணக்கஷ்டம் வர இதுவும் காரணம்

வேறு என்னென்ன பொருட்கள் எல்லாம் அட்சய திருதியை அன்று வங்காளம்?

அட்சய திருதியை அன்று பொன் பொருள் மட்டும் இன்றி கல் உப்பு, தானியங்கள், மளிகை சாமான்கள், அரிசி, தினை, மஞ்சள் நிற ஆடை, சாமி போட்டோ, பழங்கள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement