What is Gowri Nalla Neram in Tamil
ஒரு நாள் 24 நாள் மணிநேரம் என கணக்கிடப்படுகிறது என்றால், அந்த 24 மணிநேரத்தில் நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம், கௌரி நல்ல நேரம்,குளிகை போன்ற நேரங்கள் இருக்கின்றன. இந்நேரங்களை வைத்தே இந்த நேரத்தில் நல்ல செயல்களை செய்யலாம்.. செய்யக்கூடாது.. என்று கணிக்கின்றோம். இந்நேரங்களில் கௌரி நல்ல நேரம் ஓன்று இருப்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால், கௌரி நல்ல நேரம் என்றால் என்ன.? என்பது நம்மில் பெரும்பாலானவர்க்கு தெரியாது. எனவே, அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில் கௌரி நல்ல நேரம் என்றால் என்ன.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நல்ல நேரம் என்றால் என்ன.?
நல்ல நேரம் என்பது சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு அதிகமாக கிடைக்கும் நேரமாகும். இது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நடக்கும். அதாவது, காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமியில் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தை நம் முன்னோர்கள் கணக்கிட்டு நல்ல நேரமாக கூறுகிறார்கள்.
கௌரி நல்ல நேரம் என்றால் என்ன.?
கௌரி நல்ல நேரம் என்பது கௌரி பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ள நேரம் ஆகும். அதாவது, ஒரு நாளை பதினாறு முகூர்த்தங்களாக பிரிக்கப்படும் முறையாகும். இந்த 16 முகூர்த்தங்களில் பகல் பொழுதில் எட்டு முகூர்த்தங்கழும் இரவு பொழுதில் எட்டு முகூர்த்தங்களும் அடங்கும். இதில் 1 முகூர்த்தம் என்பது 1.30 நேரம் ஆகும்.
இம்முறையே கௌரி நல்ல நேரம் ஆகும். இவற்றில் சொல்லப்படும் எட்டு முகூர்த்தங்கள் பின்வருமாறு:
எட்டு முகூர்த்தங்கள்:
- உத்தி
- அமிர்தம்
- ரோகம்
- லாபம்
- தனம்
- சுகம்
- விஷம்
- சோரம்
இந்த எட்டு முகூர்த்தங்களில், சுப முகூர்த்தங்களான அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்தி ஆகிய முகூர்த்தங்கள் வரும் வேளையில் சுப காரியங்களை செய்யலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |