கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் | Gowri Panchangam Tamil

Gowri Panchangam Tamil

கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் | Gowri Panchangam

Gowri Panchangam Tamil – பஞ்சாங்கம் என்பது ஐந்து முக்கிய விஷயங்களை அடங்கியது. அவை தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஐந்து வகைகளை கொண்டு கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் பார்க்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு ஒவ்வொரு நாளும் சுப நாளா அல்லது அசுப நாளா என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதாவது இன்றைய சூரிய உதயம்/ அஸ்தமனம், நல்ல நேரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், சந்திராஷ்டமம் மற்றும் ஜோதிட பஞ்சாங்கம் மூலம் கணக்கிடப்படுகிறது.

சரி இந்த பதிவில் பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம்? மற்றும் கௌரி பஞ்சாங்கம் அட்டவணை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

கௌரி பஞ்சாங்கம் என்றால் என்ன?

நம்மளுடைய ஒவ்வொரு நாளின் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருவகைகள் இருக்கின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் நன்மையாக நடந்து முடியும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் நாம் சுப காரியங்கள் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடலாம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை கௌரி பஞ்சாங்கம் அட்டவணையில் நாம் தெரிந்து கொள்ள முடியும். அதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது.
சரி இப்பொழுது ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி பட்டவையாக இருக்கின்றனதென்று என்பதை கீழ் கொடுத்துள்ள அட்டவணையில் நீங்கள் பார்க்கலாம்.

கௌரி பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி? | Gowri Panchangam Tamil 2021

கௌரி பஞ்சாங்கம் அட்டவணை – Gowri Panchangam Tamil
கிழமைகாலம்06.00 – 07.3007.30 – 09.0009.00 – 10.3010.30 – 12.0012.00 – 01.3001.30 – 03.0003.00 – 04.3004.30 – 06.00
ஞாயிறுபகல்உத்திஅமிர்தரோகம்லாபம்தனம்சுகம்விஷம்சோரம்
இரவுதனம்சுகம்சோரம்விஷம்உத்திஅமிர்தரோகம்லாபம்
திங்கள்பகல்அமிர்தவிஷம்லாபம்லாபம்தனம்சுகம்சோரம்உத்தி
இரவு சுகம்சோரம்உத்திஅமிர்தரோகம்விஷம்தனம்லாபம்
செவ்வாய்பகல்ரோகம்லாபம்தனம்சுகம்விஷம்உத்திசோரம்அமிர்த
இரவு சோரம்உத்திசோரம்அமிர்தரோகம்லாபம்சுகம்தனம்
புதன்பகல்லாபம்தனம்சுகம்விஷம்சோரம்அமிர்தஉத்திரோகம்
இரவு உத்திஅமிர்தரோகம்லாபம்சுகம்தனம்விஷம்சோரம்
வியாழன்பகல்தனம்சுகம்சோரம்அமிர்தஉத்திவிஷம்ரோகம்லாபம்
இரவு அமிர்தரோகம்விஷம்தனம்லாபம்சுகம்சோரம்உத்தி
வெள்ளைபகல்சுகம்சோரம்உத்திவிஷம்அமிர்ததனம்லாபம்சுகம்
இரவு ரோகம்லாபம்தனம்சுகம்சோரம்உத்திவிஷம்அமிர்த
சனிபகல்சோரம்உத்திவிஷம்அமிர்தரோகம்லாபம்சுகம்தனம்
இரவு லாபம்தனம்சுகம்விஷம்உத்திசோரம்அமிர்தரோகம்

 

இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப முகூர்தங்களாகும். விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்தங்களாகும்.

கௌரி பஞ்சாங்கம் லாபம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். அதாவது எல்லாம் லாபகரமாக முடியும்.

அமிர்தம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் கிட்டும்.

கௌரி பஞ்சாங்கம் சுகம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். அதேபோல் நோய்களினால் அவதிப்படுபவர்கள் இந்த நேரத்தில் நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகும்.

தனம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நல்ல லாபமும் பெறலாம்.

கௌரி பஞ்சாங்கம் உத்தி என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் உத்தியோகம் சம்மந்தப்பட்ட காரியங்கள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு சம்மந்தப்பட்ட முயற்சிகள் செய்தால் வெற்றி கிட்டும்.

விஷம் என்றால் என்ன?

விஷம் என்பது அசுப முகூர்த்தம் ஆகும். இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் தோல்வி தான் கிட்டும். தேவையற்ற விவகாரங்களும், விரோதங்களும் ஏற்படும்.

சோரம் என்றால் என்ன?

இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை செய்தாலும் எதாவது தடை ஏற்பட்டு நின்று போகும். பொருள்கள் அல்லது பணம் களவாடப்படும்.

ரோகம் என்றால் என்ன?

இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்த சுப காரியத்தையும் செய்யக் கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும். விரைவில் குணமாகாது.

இதையும் படியுங்கள்–> எந்த ஹோரையில் என்ன செய்யலாம்?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்