வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குரு பகவானின் ஆசி பெற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்…!

Updated On: May 6, 2024 6:07 PM
Follow Us:
kuru pagavaan parigaram
---Advertisement---
Advertisement

Guru Bhagavan Aasi Pera Pariharam In Tamil

குரு பகவான் மே 1, 2024 அன்று தான் பெயர்ச்சியாகியிருக்கிறார். யாருக்கெல்லாம் குரு பகவான் சாதகமாக இல்லையோ அவர்கள் இந்த பரிகாராத்தை செய்வதன் மூலம்  ஜாதகத்தில் குருவால் பிரச்சனைகள் இருந்தாலும் அது நிவர்ததியாகிவிடும். ஜாதகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் குரு பகவானின் ஆசியை முழுமையாக பெற முடியும். அந்த பரிகாரம் என்னவென்று கீழே பார்க்கலாம்.

குருவிற்கு விளக்கு ஏற்றலாம் :

guru bhagavan

வியாழக்கிழமை அன்று குரு பகவான் கோவிலுக்கு சென்றாலும் சரி அல்லது நவ கிரகம் உள்ள கோவிலுக்கு சென்றாலும் சரி அங்கு சென்று குருவிற்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் விளக்கு போடலாம். விளக்கு போட தேவையானவை அகல் விளக்கு, பசு நெய், திரி, இரண்டு ஏலக்காய்.

விளக்கு ஏற்றும் முறை :

அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு, ஏலக்காய் போட்டு  குரு பகவானிற்கு விளக்கை ஏற்ற வேண்டும். இப்படி விளக்கை ஏற்றி உங்கள் பிரார்த்தனைகளை குருவிடம் வைக்க வேண்டும். இதனால் உங்கள் ஜாதகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது சரியாகி விடும்.

எலுமிச்சை விளக்கு :

elumichai vilaku

மண் விளக்கிற்கு பதிலாக எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் இருக்கும் நடு பகுதிகளை எடுத்துவிட்டு திருப்பி வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏலக்காய் அதில் போட்டு கொள்ளுங்கள். 3 எலுமிச்சை பழங்களை இப்படி விளக்கு செய்தால் ஆறு விளக்குகள் கிடைக்கும். இப்படி ஆறு  விளக்கை ஏற்றி அதில் ஏலக்காய் போட்டு குரு பகவானை வேண்டி அவர் முன் விளக்கை ஏற்றி வைத்தால் சிறப்பான பலன் கிடைக்கும். பிரார்த்தனையில் உங்கள் ஜாதத்தில் குரு சாதகமாக இலையென்றாலும் எந்த பிரச்சனையும் இல்லாதவாறு இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து இந்த விளக்குகளை ஏற்றி பாருங்கள் கண்டிப்பாக குரு பலன் கிடைக்கும்.

வியாழக்கிழமையில் இந்த இரண்டு பரிகாரத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். முதன்மைக்குரிய பரிகாரம் எலுமிச்சை விளக்கு. இந்த பரிகாரம் நல்ல பலன்களை கொடுக்கும். எலுமிச்சை விளக்கு போட முடியவில்லையென்றால் அகல் விளக்கு பரிகாரம் செய்யுங்கள் இதுவும் நல்ல பலனை தரும்.

குரு உதயமாவதால் இந்த 5 ராசிக்காரர்கள் தான் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நனைய போகின்றார்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now