குரு பிரம்மா குரு விஷ்ணு ஸ்லோகம் தமிழில்..!

Advertisement

Guru Brahma Guru Vishnu Sloka in Tamil

பொதுவாக நாம் அன்றாடம் செயல்கள் பலவற்றை இருந்தாலும் கூட அதில் அதிகமாக நமக்கு பிடித்த செயல்களை தான் செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் இவ்வாறு நினைப்பதில் எல்லோருக்கும் எல்லாமும் நிறைவேறுமா என்பதில் பல சந்தேகங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மனதில் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற வேண்டும் என்றும், கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதிற்கு பிடித்த கடவுளை வணங்குவார்கள். மேலும் கடவுளை வணங்கும் போது ஒரு சில மந்திரம் மற்றும் ஸ்லோகங்களை கூறுவார்கள். அந்த வகையில் இன்று குரு பிரம்மா குரு விஷ்ணு ஸ்லோகம் பாடல் வரிகளை தான் பார்க்கப்போகின்றோம்.

குரு பிரம்மா குரு விஷ்ணு லிரிக்ஸ்:

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வரஹ
குரு சாக்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ..!

முருகன் பக்தி பாடல்கள் வரிகள்

குரு பிரம்மா குரு விஷ்ணு மந்திரம் விளக்கம்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள குரு பிரம்மா, குரு விஷ்ணு மந்திரமானது குரு பகவானுக்கு ஏற்ற மந்திரம் ஆகும். இதோடு மட்டும் இல்லாமல் இந்த மந்திரமானது தெட்சிணா மூர்த்தியையும், நமக்கு கல்வி அறிவினையும், கலைகளையும் கற்று கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களையும் சிறப்பிக்கும் விதமாகவும் இது இருக்கிறது.

 குரு பிரம்மா குரு விஷ்ணு லிரிக்ஸ்

ஏனென்றால் இந்த உலகத்தில் மனிதர்களாக பிறந்த அனைவரும் பிறக்கும் போதே அனைத்தினையும் கற்று கொண்டே பிறப்பது இல்லை. நம்முடைய வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தான் நமக்கு எல்லா விஷயங்களும் தெரிய வருகிறது. அதுவும் ஆசிரியர்கள் மூலமாகவே இவற்றை எல்லாம் தெரிய வருகிறது.

இத்தகைய ஸ்லோகலத்தை கூறுவதன் மூலம் நம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் கழிந்து விடும் என்பதும் ஒரு ஐதீகமாக இருக்கிறது.

மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு என முப்பெரும் கடவுள்களின் ஆசீர்வாதத்தையும் அளிக்கும் விதமாகவும் இந்த மந்திரமானது உள்ளது.

ஆகவே இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள இந்த மந்திரத்தை வியாழக்கிழமை அன்று மறக்காமல் 108 முறை கூறுவது மிகவும் நல்லது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement