குரு பாதுகா ஸ்தோத்திரம்

Advertisement

Guru Paduka Stotram Lyrics in Tamil

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான அபிஷேகங்கள் மற்றும் வழிபாடு மாறும். அது போல நமக்கு கஷ்டம் என்று வரும்போதெல்லாம் கடவுளிடம் தான் கைகூப்பி மனம் உருகி வேண்டி கொள்வோம். எனது கஷ்டங்களை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று கேட்டு கொள்வோம். மனித வாழ்க்கையில் மாதா, பிதா, குரு, தெய்வம் போன்றவர்களை மறக்காமல் இருக்க வேண்டும்.

குரு பாதுக்க ஸ்தோத்திரம் என்பது ஒருவர் தம்முடைய‌ வாழ்க்கையில் குருவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பாடலாக இருக்கிறது.  இந்த பாடலை உச்சரிப்பதால் குருவின் கருணை கிடைக்கும். இது ஆசிரியரின் (குருவின்) பல குணங்களைப் பாராட்டுகிறது மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தேடுபவரின் வாழ்க்கை எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதை விளக்குகிறது.  அதனால தான் இந்த பதிவில் குருவிற்கான குரு பாதுகா ஸ்தோத்திரம் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

குரு பாதுகா ஸ்தோத்திரம்:

அனந்த சம்சார சமுத்ர தார,
நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம்,
வைராக்ய சாம்ராஜ்யத பூஜநாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

கவித்வ வாராஷினி ஸாகராப்யாம்,
தௌர்பாக்ய தாவாம்புத மாலிகாப்யாம்,
தூரிக்ருதா நம்ர விபத்தி தாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

நதா யயோ ஸ்ரீபதிதாம் ஸமீயு,
கதாச்சிதாப்யாஷு தரித்ர வர்யா,
மூக்காஷ்ச்ச வாச்சஸ் பதிதாம் ஹி தாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

நாலீக நீகாச பதா ஹ்ரி தாப்யாம்,
நானா விமோஹாதி நிவாரிகாப்யாம்
நம ஜனா பீஷ்டததி பிரதாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

ந்ருபாலி மௌலீப்ரஜ ரத்ன காந்தி,
ஸரித்வி ராஜ ஜ்ஜஷ கன்யகாப்யாம்,
ந்ருபத்வதாப்யாம் நதலோக பங்க்தேஹே,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

பாபாந்த காரார்க பரம்பராப்யாம்,
தாபத்ரயாஹீந்த்ர ககேஸ்வராப்யாம்,
ஜாட்யாப்தி சம்ஸோ ஷண வாடவாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

ஷமாதி ஷட்க ப்ரத வைபவாப்யாம்
சமாதி தான வ்ரத தீக்ஷிதாப்யாம்,
ரமாதவாங்க்ரே ஸ்திர பக்திதாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

ஸ்வார்சா பரானா கிலேஷ்டதாப்யாம்,
ஸ்வாஹா சஹாயாக்ஷ துரந்தராப்யாம்,
ஸ்வாந்தாச்ச பாவ ப்ரத பூஜநாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

காமாதி ஸர்ப்ப வ்ரஜ காருடாப்யாம்,
விவேக வைராக்ய நிதி பிரதாப்யாம்,
போத பிரதாப்யாம் த்ருத மோக்ஷதாப்யாம்,
நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம்.

சீரடி சாய்பாபாவின் அஷ்டோத்திரம்

சிவபெருமானின் பிரம்ம முராரி பாடல் வரிகள்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

 

Advertisement