குரு பெயர்ச்சி 2023
குரு பகவான் சித்திர மாதம் 9-ம் தேதி ஏப்ரல் 22-ம் தேதி மேஷ ராசிக்கு இடம்பெயர்ச்சியாகிறார். மேஷ ராசிக்கு இடம்பெயர்ச்சியாகும் குரு பகவான் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்ய போகிறார். இதனால் எல்லா ராசிகளுக்கும் பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கும் மட்டும் அதிர்ஷ்டத்தை அள்ளி தர போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு நீணட நாட்களாக வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் இந்த காலம் உங்களுக்கு நலன் காலமாக இருக்க போகிறது. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். வருமானம் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகமாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் செல்வதால் மன நிம்மதியோடும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இந்த காலம் உங்களுக்கு எல்லா செயல்களிலும் அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், மதிப்பும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
பங்குனி உத்திரம் அன்று நினைத்து நடக்க இந்த விரதத்தை கடைபிடிக்கவும்..!
மேஷம்:
மேஷ ராசிகாரர்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நடக்க கூடிய வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் பல இனிப்பான விஷயங்கள் நடக்கும். மேஷ ராசிக்காரர்கள் ஏதேனும் நோயில் பாதிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |