ரிஷபத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது..

Advertisement

ரிஷபத்தில் வியாழன் இருப்பதால் பலன்கள் 

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருப்பார்கள். இப்படி தங்களின் ராசிகளை மாற்றும் போது மற்ற ராசிகளுக்கு நன்மை மற்றும் தீமை என இரண்டுமே இருக்கும். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரித்து வருகிறார், இவர் அடுத்ததாக ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைய போகிறார். இவர் மே மாதம் வரைக்கும் ரிஷப ராசியிலே இருக்க போகிறார்.

குரு பகவானின் இடம் மாற்றமானது எல்லா ராசியிலும் இருந்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் நன்மையை அள்ளி தர போகிறது. அவை என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மேஷம்:

குரு பகவானின் மாற்றமானது மேஷ ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கின்றது. இதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவரை உங்களுக்கு கடன் பிரச்சனை இருந்தால் அதிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.

ரிஷபம்:

குரு பகவான் ரிஷப ராசிகளுக்கு பலன்களை அள்ளி கொடுப்பார் என்றே சொல்லலாம். உங்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலைமை திருப்தியாக காணப்படும். திடீரென உங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் காணப்படும்.

கடகம்:

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றமானது நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது. முக்கியமாக தொழிலில் முனேற்றத்தை அடைவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நிதிநிலைமை திருப்தியாக காணப்படும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்கு பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். மேலும் நீங்கள் ஏதாவது முதலீடு செய்வதாக இருந்தால் இந்த நேரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிம்மம்:

குருவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்,. உங்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனை நீங்கும்.பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் பணியில் பதவி உயர்வும், சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் ஏதும் புதிதாக சொத்து அல்லது வாகனம் வாங்குவதாக இருந்தால் இந்த நேரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கன்னி:

கன்னி

கன்னி ராசிகாரர்களுக்கு குருவின் மாற்றமானது சிறப்பானதாக இருக்கும். நீங்கள் செய்ய கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

 

Advertisement