Guru Peyarchi Benefits in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசிகளை மாற்றுவதன் மூலம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அதிலும் குறிப்பாக கிரகங்களில் மிக பெரிய கிரகம் ஆன வியாழன் தனது ராசி மாற்றுவது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது விருப்பப்படி தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார். தற்போது தேவகுரு வியாழன் மேஷ ராசியில் இருக்கிறார். அடுத்த வருடம் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் நுழையும். குரு ராசியில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலனைத் தரும். இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம் வாங்க..
சூரியன் புதன் சேர்க்கையால் நவம்பர் மாதம் முழுவதும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான்
குரு பெயர்ச்சியால் வாழ்க்கை டாப் கியரில் போகப்போகும் 4 ராசிக்காரர்கள்:
2024-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் சிறப்பான வாழ்க்கையை வாழ போகும் 4 ராசிக்காரர்கள். அவர் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை எல்லாம் விரிவாக இங்கு காணலாம் வாங்க..
மேஷ ராசி:
தற்போது, வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். அதே நேரத்தில், அடுத்த ஆண்டு ரிஷப ராசியில் குரு பெயர்ச்சியின் போது, அது மேஷத்தின் செல்வ வீட்டில் அமரவார்.
இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் அதிகரிக்க கூடும். மேலும் இந்த காலகட்டத்தில், எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமன் பிரச்சனை இருக்கலாம். குடும்பத்தில் உங்களின் புகழ் உயரும். திடீர் பண ஆதாயம் கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
கடக ராசி:
குரு தனது ராசியை மாற்றி, கடக ராசியின் வருமான வீட்டில் அமர்வார். கடக ராசியில் குரு உச்சம் பெறுவார். இந்த ராசியில் குரு இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு விரும்பிய வருமானம் உயரும்.
எளிமையான வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
30 ஆண்டுக்குப் பிறகு சனியால் ஏற்படும் கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிகளின் காட்டில் பணமழை
சிம்ம ராசி:
2024 ஆம் ஆண்டில், குரு தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த நேரத்தில், தேவகுரு வியாழன் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வீட்டில் தனது பார்வையை செலுத்துவார்.
இதன் மூலம் சிம்ம ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். மேலும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அரசு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே பாசமும் அன்பும் அதிகரிக்கும்.
கன்னி ராசி:
அடுத்த ஆண்டு, குரு கன்னியின் அதிர்ஷ்ட வீட்டில் நகர்கிறார். ஜோதிடத்தின் படி, அதிர்ஷ்ட வீட்டில் செவ்வாய், வியாழன் மற்றும் சூரியன் இருந்தால், அந்த நபர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுகிறார்.
இதன் மூலம் கன்னி ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலன் பெறலாம். சிக்கிய பணத்தை மீட்க முடியும். நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போகும் செய்வாய்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |