குரு பெயர்ச்சி பலன்கள் 2024
பொதுவாக ஆன்மீகத்தின் படி வியாழக்கிழமை ஆனது குருவிற்கு உகந்த நாளாக இருக்கிறது என்று கூறுவார்கள். அதேபோல் சனி கிழமையும் குருவின் நாளாக கருதுவார்கள். இவ்வாறு குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று விரதம் இருப்பதனால் நினைத்த காரியம் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்று கூறுவது ஒரு ஐதீகமாக இருக்கிறது. இப்படி எல்லாம் நாம் குரு பகவானை வழிபட்டு கொண்டிருக்கும் நிலையில் குரு பெயர்ச்சி என்பது இவற்றை எல்லாம் விட இன்னும் சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு முடிவடைந்து 2024-ஆம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சி ஆனது எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கிறது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
Guru Peyarchi Good for Which Rashi in Tamil:
இந்த வருடம் முடிந்த பிறகு அடுத்த வருடத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். அதாவது குரு பகவான் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வக்ர நிலையை அடைந்து மே மாதம் 1-ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்கிறார். ஆகையால் எந்த ராசிக்கு அமோகமான பலன்கள் கிடைக்கிறது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.
மேஷ ராசி:
குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றாலும் கூட மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே பலன்களை தருகிறார். அதன் படி பார்க்கையில் இதுநாள் வரையிலும் இல்லாத பொருளாதார நிலை காணப்படும். மேலும் குடும்பத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சுழல் ஆனது காணப்படும்.
உங்களுக்கு அமோகமான காலமாக இருந்தாலும் கூட உடல் ஆரோக்கியத்தில் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
கடக ராசி:
ராசியில் 4-வது ராசியாகிய கடக ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் உண்டாகும் பலன் ஆனது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான நிலை காணப்படும். அதேசமயம் வருமானம் நிலை உயர்ந்து காணப்படும்.
புதிய வாய்ப்புகளும் கைகூடி வரும் நிலை ஆனது ஏற்படுகிறது.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையிலும் அமோகமான பலன்களையே அளிக்கிறது. புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக இருக்கிறது. மேலும் நிதிநிலை மேலோங்கி காணப்படும்.
அதேபோல் கடன் பிரச்சனை அனைத்தும் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். மேலும் ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே காணப்படுகிறது.
சிம்ம ராசி:
இதுநாள் வரையிலும் சிம்ம ராசிக்காரர்கள் அரசு வேலைக்காக போராடி கொண்டிருந்தார் என்றால் அதற்கான ஒரு நல்ல முடி உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் குரு பெயர்ச்சி அதற்கான வாய்ப்பினை உங்களுக்கு அளிக்கலாம்.
குடும்பத்தில் உள்ளவர்களுடன் நெருக்கமாகவும், பாசமாகவும் நடந்து கொள்வீர்கள். மேலும் அலுவலகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
2024-ல் ரிஷபத்தில் நுழையும் குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோகமான வாழ்க்கை தான்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |