Guru Peyarchi in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் ஆன்மீகம் பதிவின் வாயிலாக குரு பெயர்ச்சி என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்கபோகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை இருக்கும். அப்படி ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் எதை செய்தாலும் அதை ஜோதிட முறைப்படி தான் செய்வார்கள். அதாவது அவர்கள் எந்த ஒரு செயல் தொடங்குவதற்கு முன்னும் ஜாதகம் பார்ப்பார்கள்.
சரி அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சி என்பதும் இடம் பெறும். அதுபோல நம்மில் பலரும் ஒருவரின் ஜாதக கட்டத்தில் குரு பெயர்ச்சி இருந்தால் அவர்களுக்கு நன்மைகள் நடக்குமா..? இல்லை தீமைகள் நடக்குமா என்று தான் யோசித்திருப்போம். ஆனால், குரு பெயர்ச்சி என்றால் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் குரு பெயர்ச்சி என்றால் என்னவென்று நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ரிஷபத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது..
குரு பெயர்ச்சி என்றால் என்ன..?
பொதுவாக ஜோதிட சாஸ்திரங்களின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இப்படி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது ஒவ்வொரு ராசிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் உருவாகின்றன.
சரி வாழும் இவ்வுலகை ஆன்மீக பூமியாக அடையாளப்படுத்துவது குரு என்ற வார்த்தை தான். குரு பகவானை நாம் அனைவருமே வணங்கி இருப்போம். அவ்வளவு ஏன் கோவிந்தன் கைவிட்டாலும் பிழைத்து கொள்ளலாம், ஆனால் குரு கைவிட்டால் பிழைக்க வழியே இல்லை என்று கபீர்தாசர் கூறியிருக்கிறார்.
மேலும் குரு என்றால், இருட்டை போக்குபவர் மற்றும் கனமானவர் என்று போற்றப்படுகிறார். அப்படி அனைவருக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் குருவானவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதை தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.
மேலும் ஜோதிடத்தில் குரு தான் அதிர்ஷ்டமான கிரகம் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தரும் கிரகமாக குருபகவான் இருக்கிறார்.
அதுபோல ஒருவருடைய ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும், அந்த ஜாதகத்தில் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள்.
அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும். ஜாதகத்தின் விதியையும் மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது. அதனால் தான் ஒரு ராசிக்கு குரு பெயர்ச்சி வந்தால் பல நன்மைகள் நடக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |