குரு பெயர்ச்சியினால் நன்மையை அடைய போகும் ராசிகள் 2025
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுப காரியங்களிலும் குருபகவான் முக்கியமாக இருக்கிறார். ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடைந்து கொண்டே இருப்பார்கள். அந்த அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் 1 வருடம் காலம் இருப்பார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த நேரத்தில் மே 11-ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி மே 14-ம் தேதி குரு பெயர்ச்சி நடக்க விருக்கிறது. குரு பகவானின் பார்வையானது 12 ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிஞ்சுக்கோங்க.
கும்பம்:

கும்ப ராசிக்காரர்களை சனி பகவான் படாத பாடு படுத்தி கொண்டு வருகிறார். உங்களின் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு குரு பகவான் வருகிறார். குருவின் ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் உங்களுடைய துன்பங்கள் எல்லாம் நீங்க போகிறது. நீங்கள் எந்த காரியங்கள் செய்ய நினைத்தாலும் சரி அல்லது புதிதாக ஆரம்பித்திருந்தாலும் சரி அதிலிருந்து சிறப்பான பலன்களை பெறுவீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வெற்றி மீது வெற்றி கிடைக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமண வரன் கைகூடாமல் இருப்பவர்களுக்கு இந்த ஹாம் உகந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரன் கிடைக்கும். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மை மட்டும் சேர கூடிய காலமாக இருக்கிறது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் குரு பகவான் சிறப்பான மாற்றத்தை கொண்டு வரப்போகிறார். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஏதேனும் சண்டை வந்திருந்தால் அவை இந்த நேரத்தில் சுமுகமாக முடியும். உங்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய காலமாக இருக்கும். உங்களிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களை சுற்றியுள்ள எல்லா பிரச்சனைகளில் இருந்து குரு பகவான் உங்களை காப்பற்ற போகிறார். மேலும் குரு பகவானுக்கு வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபட்டால் இன்னும் பல கோடி நன்மைகள் நடக்கும்.
குரு, ராகு, கேது பெயர்ச்சியால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது
துலாம்:

குரு பகவான் பெயர்ச்சி ஆனது துலா ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனது அதிகரிக்கும். மேலும் உங்களுடைய வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனை எல்லாம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ போகிறீர்கள். உங்களை தேடி எல்லா பக்கத்தில் இருந்தும் அதிர்ஷ்டம் வரக்கூடும். மேலும் இதுவரை இருந்த பணவரவை விட அதிகமாக காணப்படும். மேலும் உங்களிடம் செல்வ செழிப்பு அதிகரிக்கும். வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முக்கியமாக வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகம் இருக்கிறது. திருச்செந்தூர் சென்று முருகனையும், தட்சிணாமூர்த்தியை வணங்கி வந்தால் உங்களின் நன்மைகள் ஆனது அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சி ஆனது எல்லா விதத்திலும் நன்மையை தார் கூடியதாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் மூலம் வருமானம் ஆனது அதிகரிக்கும். உங்கள் வீட்டில் சும்ப காரியங்கள் நடக்கும். அதுவும் குழந்தைகளுக்கு சுப காரியங்களை நடத்துவீர்கள். பிள்ளைகளால் நீங்கள் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தீர்கள் என்றால் இந்த காலத்தில் அவை நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களின் தன்னம்பிக்கையானது அதிகரிக்கும். இதன் மூலம் நீங்கள் எந்த செயல்கள் செய்தாலும் அதில் வெற்றியை அடைவீர்கள். சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














