கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

Kanni Rasi Guru Peyarchi Palangal 

குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 கன்னி ராசி | Kanni Rasi Guru Peyarchi Palangal 

குரு பெயர்ச்சி பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் கிடைக்கூடும். அந்த வகையில் நவம்பர் மாதம் 13.11.2021 அன்று சனிக்கிழமை அன்று மாலை 6.22 மணிக்கு குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. ஆகவே கன்னி ராசி, கன்னி லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம் வாங்க.

கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

அனைவரிடமும் கலகலப்பாக பேசி மகிழும் கன்னி ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இங்கு நாம் படித்தறியலாமா.. இதுவரை உங்கள் ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பல நற்பலன்களை வழங்கிவந்த குருபகவான் இப்போது ஆறாம் வீடான குடும்பத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆறாம் வீடு என்பது அவ்வளவு பெரிதாக உகந்த இடம் என்று சொல்ல முடியவில்லை. ஆகவே உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்காது என்று கவலைப்பட வேண்டாம் குருபகவான் தன் பார்வை பலத்தால் சில அதிர்ஷடங்களையும் உங்களுக்கு வாரி வழங்குவார்.

குரு பெயர்ச்சி 2021 கன்னி ராசி – Kanni Rasi Guru Peyarchi Palangal 2021 to 2022

குடும்பம்:

குருபகவான் இரண்டாம் இடமான தன குடும்ப வாக்குஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களது பேச்சில் ஒரு தெளிவு பிறக்கும். உங்கள் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவன் உறவுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில சமயங்களில் வாழ்க்கைத்துணையோடு அனுசரித்துச் செல்லுங்கள் அது உங்கள் மகிழ்ச்சியை வலுப்படுத்தும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வேலை:

குருபகவான் உங்களின் 10-ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் வேலை கிடைக்காதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடிவரும். வெளி இடங்களில் உங்களின் செல்வாக்கும் உயரும். பதவியுயர்வு தேடிவரும். பணவரவும் அதிகரிக்கும். இருப்பினும் அலுவகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனாலும் மேலதிகாரிகள் உங்களை மனம் திறந்து பாராட்டுவார்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் பலன் தரும்.

பொது பலன்கள்:

குரு பகவான் இந்த பெயர்ச்சியின் போது அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் கன்னி ராசிக்காரர்கள் தேவையற்ற கோபம், செலவு ஆகியன ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல் ஆரோகியத்திலும் அக்கறை செலுத்துங்கள். முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்க வேண்டாம். பயணத்தின் போதும் உரிய கவனம் தேவை. சில சமயங்களில் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள்.

வியாபாரம்:

ஏதாவது ஒரு விஷயத்தில் புதிய முதலீடு செய்வதாக இருந்தால் பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. பணியிடத்தில் ஊழியர்கள் உங்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுப்பார்கள். போட்டிகள் அதிகரிக்கும். அதனால் லாபம் குறைவாகவே வரும் என்றாலும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.

ஆகவே குரு பகவான் இந்த பெயர்ச்சியின் போது தங்களை கொஞ்சம் அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் பல முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரம்:

சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானை வணங்குங்கள். வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். குருபகவானின் முழுமையான அருள் தங்களுக்கு கிடைக்கக்கூடும்.

இதையும் படியுங்கள்–> குரு பெயர்ச்சி 2022 எப்போது வருகிறது?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்