குரு பெயர்ச்சி பலன்கள் 2023
பொதுவாக வருடத்திற்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி போன்றவற்றை வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் இத்தகைய கிரக நிலை மாற்றத்தால் சில ராசிகளுக்கு நன்மையும் சில ராசிகளுக்கு தீமையும் நடக்கும் என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது நாள் வரையிலும் சொல்லப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் இருக்கும் போது வரும் ஏப்ரல் மாதம் குருவுடன் ராகு இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு இனி பனைமழை பொழியும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த வாய்ப்பும் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் உள்ளது என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அப்படி ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணமழை பொழியும் ராசியில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
குரு பார்வை பலன்கள்:
வருகின்ற ஏப்ரல் மாதம் குரு பகவான் அவருடைய 1-வது வீடான மேஷ ராசிக்கு செல்கிறார். எப்போதும் குருபகவான், சனிபாகவன் இவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நல்ல காலம் என்று சொல்லலாம்.
அந்த வகையில் குருவும், ராகுவும் மேஷ ராசியில் இணைந்தாலும் குருவின் பார்வையால் பணமழை பொழியப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாருங்கள்.
மிதுனம் ராசி:
ராசியில் மூன்றாவது ராசி என்றால் அது மிதுன ராசி தான். அத்தகைய ராசியில் இதுநாள் வரையிலும் குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்தார். ஆனால் இப்போது குருபகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்திற்கு மிதுன ராசிக்கு செல்ல உள்ளார்.
அதனால் இதுநாள் வரையிலும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படப்போகிறது என்று கூறப்படுகிறது. மேலும் நினைத்த காரியம் விரைவில் கைகூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
சிம்ம ராசி:
இதுநாள் வரையிலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையானது மிகவும் போராட்டமான ஒரு காலமாக இருந்து இருக்கும். அது அனைத்தும் முழுவதுமாக மறுபடுவதற்கு குருபகவான் உங்களுடைய ராசியில் பாக்ய ஸ்தானமான 9-வது இடத்திற்கு வருகின்றன ஏப்ரல் மாதம் வரவுள்ளார்.
ஆகையால் இந்த மாற்றத்தினால் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சனை, நோய் பிரச்சனை அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் இனி மகிழ்ச்சியை மட்டும் அனுபவிக்கும் காலம் விரைவில் வரப்போகிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
5 நாட்களில் சனிப்பெயர்ச்சி காரணமாக இந்த ராசிக்கு எல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்..! உங்க ராசி இதுல இருக்கானு தெரிஞ்சுக்கோங்க..! |
துலாம் ராசி:
குருவின் பார்வையால் இனி துலாம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் குருபகவான் துலாம் ராசியில் 7-வது இடமான களத்திர ஸ்தானத்தை பார்வை இடுகிறார்கள். அதனால் செல்வம் செழித்து விரைவில் திருமணம் கைக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுநாள் வரையிலும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் நீங்கி விடும்.
தனுசு ராசி:
ஏப்ரல் மாதம் முதல் எடுத்த காரியத்தில் வெற்றி மட்டுமே தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். எப்படி என்றால் தனுசு ராசியில் 5-வது இடத்தில் உள்ள பஞ்சம ஸ்தானத்தில் குரு பார்வை இடுகிறார். இதனால் எடுக்கும் அனைத்து முயற்சிலும் வெற்றியும் மற்றும் நல்ல பண வரவு இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
மீன ராசி:
ராசியில் கடைசி ராசியான மீன ராசியில் ஏப்ரல் மாதத்தில் இருந்து குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் பார்வை இடுகிறார். ஆகாயல் இனி உங்களுடைய வாழ்க்கை முழுவதும் பண மழையில் தான் இருக்க போகிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
மேலும் குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு இல்லாது என்று சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |