குரு பெயர்ச்சியினால் இந்த ராசிகளுக்கு வேலையில் வருமானம் அதிகரிக்கும்..எந்தெந்த ராசின்னு தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

குரு பெயர்ச்சி 2023

குரு இந்த மாதம் 22-ம் தேதி, காலை 6:12 AM மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மாதம் நடக்கும் குரு பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் அளவுக்கு அதிகமான பலன்களை தர போகிறது. அது என்னென்ன ராசிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

மீனம் ராசி:

மீனம் ராசி

மீனம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். நீங்கள் சுயமாக தொழில் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு இந்த நேரம் உகந்ததாக இருக்கும்.

30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் உருவாகும் சனிப்பெயர்ச்சி..! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை டபுளாக கொட்டப்போகிறது..!

துலாம் ராசி:

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் சுயமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் அதில் வெற்றியை காண்பீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு உங்களின் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த தொகை உங்களின் கிடைக்கும்.

கன்னி ராசி:

கன்னி

 கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் காலமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும், தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.  

ரிஷப ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..!

சிம்மம் ராசி:

சிம்மம்

இந்த மாதம் குரு பெயர்ச்சியினால் சிம்ம ராசிகளுக்கு அனைத்து செயல்களிலும் நல்ல பலன்களை தரும். மேலும் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் சாதகமாக இருக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும்.

கடகம் ராசி:

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் குரு பெயர்ச்ச்சியினால் வெற்றியை தர கூடியது. பணவரவு அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமான முறையில் இருக்கும்.

மிதுனம் ராசி:

மிதுனம் ராசி

மிதுன ராசிகளுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும்.  பணவரவு மகிழ்ச்சியாக இருக்கும்.  இதனால் சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். நீங்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்தால் அதில் வெற்றியை பார்க்க முடியும்.

மேஷம் ராசி:

மேஷம் ராசி

மேஷம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி எல்லா விதத்திலும் சாதகமாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு உங்களின் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்களின் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள்.

குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இத்தல உங்க ராசி இருக்கா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   

 

Advertisement