குரு பெயர்ச்சியினால் இந்த 5 ராசிகளுக்கு பணம் கொட்ட போகிறது பிடிக்க ரெடியா.!

Advertisement

 Guru Peyarchi Top 5 Rasi in Tamil

பொதுவாக ஒவ்வொரு பெயர்ச்சியும் ஒவ்வொரு பலனை கொடுக்கும். ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும். கல்வியில் வெற்றி, ஞானம் மற்றும் ஞானத்தைப் பெறுதல் போன்றவற்றிற்கு குரு உதவுகிறார். வரும் மே மாதம் குரு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குரு பகவானை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயர்கிறார். இந்த குரு பெயர்ச்சியினால் எல்லா ராசிகளுக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் பண மழையில் நினைய போகிறார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மகரம்:

மகரம்

மகர ராசி மற்றும் மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் மிகப்பெரிய கோடீஸ்வர யோகம் கிடைக்க போகிறது. புதிதாக வீடி மற்றும் நிலம் வாங்குவது போன்றவை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த காலம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த காலம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

விருச்சிகம்:

குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் எந்த செய்தாலும் அதில் வெற்றியை அடையலாம். உங்களின் வாழ்க்கை துணையினால் மகிழ்ச்சி கிடைக்கும். நீங்க செய்கின்ற எல்லா செயலுக்கும் உங்களின் துணை பக்க பலமாக இருப்பார்கள். சொந்தமாக தொழில் செய்கிறவர்களுக்கு இந்த காலம் ஏற்றதாக இருக்கும். மேலும் நீங்க சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று  நினைப்பவர்கள் தாரளமாக சொந்தமாக தொழில் செய்யலாம்.

கன்னி:

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் மிகுந்த நன்மை கிடைக்க போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியிலும் வெற்றியை அடைவீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் , சம்பள உயர்வும் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். புதிதாக விலை உயர்ந்த சொத்துக்களை வாங்குவீர்கள்.

குரு பெயர்ச்சியால் மே 1 -ல் இருந்து இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது..! அதிர்ஷ்டம் மழையாக கொட்டப்போகிறது

ரிஷபம்:

குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் நடக்கப் போகிறது, இதனால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சிறப்பானதாக இருக்கும். ஆராய்ச்சி, ஜோதிடம் போன்ற வேலைகளில் இருப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நிதி நிலை திருப்தியாக இருக்கும். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள்.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது பெரிய யோகத்தை கொடுக்க போகிறது. நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது புதிய செயல் செய்ய வேண்டுமென்று நினைத்தால் இந்த காலம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். உங்களின் எல்லா செயல்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். புதிதாக நிலம் அல்லது விலை உயர்ந்த சொத்துக்களை வாங்குவீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement