குரு, ராகு, கேது பெயர்ச்சி மே 2025
ஜாதக கட்டத்தில் குரு, ராகு, கேது மூன்றும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த கிரகங்கள் ஆனது மே மாதம் 6-ம் தேதி இந்த மூன்று கிரகங்களானது பெயர்ச்சி அடையவுள்ளது. அதில் சூரியன் மே 14 ஆம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மே 06 ஆம் தேதி கிரகங்களின் புதன் மேஷ ராசிக்குள் நுழைவார், அதன் பின் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்வார். அதற்கு பின் மே 18 ஆம் தேதி ராகு-கேது ராசியை மாற்றவுள்ளனர்.மே மாதத்தில் கடைசியாக 31-ம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் மாற்றமானது எல்லா ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
கடகம்:

கடக ராசிக்காரர்கள் மே மாதம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள். ஏனென்றால் இந்த மாதத்தில் குருவும், சூரியனும் சாதகமாக இருக்கிறார்கள். இந்த மாதத்தில் எதிர்பாராத விதமாக வருமானம் அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சம்பளமும் அதிகரிக்கும். இதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். இதனை சிறப்பாக முதலீடு செய்வீர்கள்.
500 ஆண்டுகளுக்கு பிறகு ராகுவும், குருவும் சேர்வதால் இவங்க வீடு தேடி அதிர்ஷ்டம் வர போகிறது
துலாம்:
மே மாதமானது துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமான பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் மூலம் வருமானம் அதிகமாக கிடைக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் அதிலிருந்த நல்ல தொகை கிடைக்கும். இதனை வைத்து விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முக்கியமாக புதிதாக வாகனம், அல்லது வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாடு பயணங்கள் செய்வதற்கும் வாய்ப்புள்ளது.
மகரம்:

மகர ராசிகாரர்களுக்கு மே மாதமானது பண விஷயத்தில் எந்த குறையும் இருக்காது. எல்லா விதத்திலும் இருந்தும் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். மேலும் பணியிடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மேலும் பணியிடத்தில் வேலை பார்க்கும் சக பணியாளர்கள் மற்றும் மேல் அதிகாரிகள் உங்களின் எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். இந்த நேரத்தில் புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் இனிப்பான விஷயங்கள் நடக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












