ஏப்ரல் மாதம் முதல் 2024 வரை குரு மற்றும் ராகு சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் ஏற்பட போகுது

guru rahu serkai 2023 in tamil

குரு ராகு சேர்க்கை 2023

நம் வாழ்க்கையில் நடக்கும் இன்பம் மற்றும் துன்பம் இரண்டிலும் ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிடத்தில் குறு ராகு மற்றும் முக்கிய பங்கு வகிக்கிறது. குரு பகவான் ராசி மண்டலத்தை கடக்க தோராயமாக ஓராண்டு ஏற்படும். அதே போல் 12 ராசிகளையும் கடக்க 12 ஆண்டுகள் ஆகும். குரு மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு செல்கிறார். இந்த வருடம் ஏப்ரல் 22-ம் தேதி குரு மேஷம் ராசிக்கு இடம்பெயர்ச்சி ஆகிறார். இதன்படி 2024-ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்கிறார். ஏற்கனவே ராகு மேஷ ராசியில் பெயர்ச்சியடைந்துள்ளார். ராகு குரு இரண்டும் சேர்வதால் சில ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வர போகுது. அது எந்தெந்த ராசிகள் இந்த பதிவில் மூலம் தெரிந்து கொண்டு ஜாக்கிரதையா இருக்கவும்.

குரு ராகு சேர்க்கை பலன்கள்:

ராகு கேது பெயர்ச்சி..! இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

மிதுனம்:

மிதுனம்

குரு  ராகு சேர்க்கையால் மிதுன ராசிக்கார்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு உங்களுக்கு மனதுக்கு பிடித்த விஷயங்களை செய்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வர முயற்சிக்க வேண்டும். நீங்கள் சம்பாதிக்கின்ற பணம் எங்கே செல்கிறது என்றே அறியாத அளவிற்கு செலவுகள் ஏற்படும்.  பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். மேலும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

கடகம் :

கடகம் ராசி

 

குரு  ராகு சேர்க்கையால் கடக ராசிக்காரர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும், மேலும் பணியில் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் என்னடா வாழ்க்கை என்று யோசிக்கின்ற அளவிற்கு கஷ்டம் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் மன தைரியத்துடன் செயல்பட வேண்டும்.

மேஷம்:

மேஷம்

மேஷம் ராசிகாரர்களுக்கு குரு மற்றும் ராகு சேர்க்கை கால கட்டத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கவனமாக பணியாற்ற வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். உடலில் ஏதும் பிரச்சனை இருந்தால் அலட்சியம் செய்யாமல் அதற்கான தீர்வை காண வேண்டும். புதிதாக எதிலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசி எது இந்த சுக்கிரப்பெயர்ச்சி நல்ல காலம் தான்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்