இன்னும் 28 நாட்களில் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்..! Guru Uday Palangal in Tamil..!
Guru Uday Palangal in Tamil – பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இன்னும் சில நாட்களில் சூரிய பகவான் பெயர்ச்சியாகி போகிறார். அதாவது ஏப்ரல் 27-ஆம் தேதி மேஷ ராசியில் குரு உதயமாக உள்ளார். ஆக இந்த புதிய உதயத்தினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது என்று இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ள போகிறோம். ஆக அந்த பலன்களை அறிய இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க பதிவை முழுமையாக படித்து பயன்பெறலாம்.
மேஷம் ராசி:
இந்த குரு பெயர்ச்சியால் தாங்கள் ஆரோக்கியத்துடனும் ஆற்றலோடும் இருப்பீர். குறிப்பாக வெகு தூர ஆன்மீக பயணத்தை மேற்கொள்வீர்கள். தொழில் இந்த நேரம் தங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைத்து நிரந்தரமாக வாழ வாய்ப்பு கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குரு பெயர்ச்சி காரணமாக இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனுமாம்..! அப்போ உங்க ராசி என்னா ராசி..?
கடக ராசி:
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியில் அசாதாரணமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம் மற்றும் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். சமூதாயத்தில் உங்களது மதிப்பு அதிகரிக்கும். ஊதியம் உயர்வும், பதவி உயர்வு கிடைக்கும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு இடமாற்றம் அல்லது வேலை மாற்றம் கூட ஏற்படலாம். குறிப்பாக இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
துலாம் ராசி:
இந்த பெயர்ச்சிக்கு பிறகு தாங்கள் புதிய நபர்களைச் சந்திப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். கூட்டுத் தொழில் செய்தால் இந்த காலகட்டத்தில் அதன் மூலம் லாபம் பெறலாம். உங்கள் லாப விகிதம் முன்பை விட அதிகரிக்கும், மேலும் சில புதுமையான விஷயங்களில் முதலீடு செய்தால் அவற்றில் நல்ல லாபம் கிடைக்கும்.
மகர ராசி:
பெயர்ச்சி உங்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். உங்கள் வீட்டில் சில சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் திருப்தி அடைவீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஆண்டு சுக்கிரன் பெயர்ச்சியினால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.! இதுல உங்க ராசி இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |