Guru Vakra Nivarthi Palangal in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி செல்வம், பெருமை, செழிப்பு, உலக இன்பம் போன்றவற்றின் காரணியான குரு பகவான் ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி, தனது வக்ர நிலையில் இருந்து மாறி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். குருவின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். அதிலும் குறிப்பாக இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இதன் பலன் அதிகமானதாக இருக்கும். இந்த மூன்று ராசிக்காரர்கள் புத்தாண்டின் தொடக்கத்தில் அதாவது 2024 இல் குரு பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகாரர்கள் யார் யார் அவர்களுக்கு எந்த மாதிரியான அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க.
குரு பெயர்ச்சியால் 2024-ஆம் ஆண்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு தான் ஜாக்போட் அடிக்க போகுது
குரு வக்ர நிவர்த்தி பலன்கள்:
குரு பகவான் இந்த ஆண்டின் இறுதியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் மூன்று ராசிக்காரர்கள். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகின்றது என்று இங்கு விரிவாக காணலாம் வாங்க..
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர நிவர்த்தியால் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டில், சிறப்பு பலன்கள் கிடைக்கும். அதாவது இவர்களுக்கு மரியாதை, நம்பிக்கை, கௌரவம் அதிகரிக்கும்.
மேலும் குரு லக்ன வீட்டில் நுழைவதால் திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவும் கூடும். செல்வம் சேர்ப்பதில் முன்னோடியாக இருப்பார்கள்.
சூரியன் புதன் சேர்க்கையால் நவம்பர் மாதம் முழுவதும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான்
சிம்ம ராசி:
குருவின் வக்ர நிவர்த்தியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில், தொழில் மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. குரு பகவானின் அருளால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
மேலும் இந்த காலகட்டத்தில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது, இந்த பயணங்களால் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம்.
தனுசு ராசி:
2024 ஆம் ஆண்டில், தனுசு ராசிக்காரர்களின் முன்னேற்றப் பாதைகான கதவுகள் திறக்கப்படும். காதல் விவகாரம் இருந்தால் இந்த ஆண்டு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டு வாகனம் அல்லது சொத்து வாங்க வாய்ப்புள்ளது. அதேபோல் இவர்கள் சகல சௌகரியங்களையும் பெறுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் சில ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
30 ஆண்டுக்குப் பிறகு சனியால் ஏற்படும் கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிகளின் காட்டில் பணமழை
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |