இந்த 5 ராசிகாரர்களுக்கு தான் குரு வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளி தருமாம்..!

Advertisement

குரு வக்ர பெயர்ச்சி  இப்படியெல்லாம் அதிர்ஷ்டம் தருமா..!

பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விசயத்தில் நம்பிக்கை இருக்கும். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே போனாலும் ஆன்மிகத்தின் மீதான நம்பிக்கை குறையவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ராசிக்கு என்ன நடக்கும் குருபெயர்ச்சி வந்தால் என்ன நடக்கும், சனிப்பெயர்ச்சி வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி எல்லாம் யோசித்துக்கொண்டிருப்போம். அதிலும் குறிப்பாக பணம் மற்றும் தொழில் சம்மந்தமான அதிர்ஷ்டம் வருமா என்று தான் முதலில் பார்ப்போம். அந்த வகையில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் குரு வக்ர பெயர்ச்சி பலன் எந்தெந்த ராசிக்கு என்று விரிவாக இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள் 

குரு வக்ர பெயர்ச்சி:

நவகிரகங்களின் மகத்தான பலம் கொண்டவர்தான் குரு. அதிசாரம், வக்கிரம் அடையும் பொழுதுதான் குரு பகவான் ராசிக்கு ஒரு சில பலன்களை தருவார். குரு பகவான், தான் இருக்கும் இடத்தை விட தன் அதிகார பலத்தால் பார்க்கும் இடத்திற்கே அதிக பலன்களை தருவார். ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால்  வரும் தோஷங்களை குரு பகவான் தன் பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. வக்கிரம் பெற்ற கிரங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன்களை தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுதல் பலனை தருவார்கள்.

குரு வக்ர பெயர்ச்சி பெரும் 5 ராசிகள் :

  • துலாம்
  • விருச்சிகம்
  • தனுசு
  • மகரம்
  • கும்பம்

துலாம் ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி பலன்:

துலாம் ராசி

 

துலாம்  ராசிக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்திற்கு ராகுவுடன் பயணம் செய்வதால்  திருமண  வாழ்க்கையில் அதிக நன்மைகள் நடைபெறும். ஒரு சிலருக்கு திருமணம் நடக்காமல் பிரச்சனையில் இருந்தால் இப்பொழுது அவை சரியாகி திருமணம் கைகூடி வரும். தொழிலில் பிரச்சனை  இருந்து வந்தால் இப்பொழுது சரியாகிவிடும். அதிக வருமானம் வரும். பங்கு வர்த்தகத்தில் அதிக பலன் கிடைக்கும்.

விருச்சிக ராசி குரு வக்ர பெயர்ச்சி பலன்:

விருச்சிகம் ராசி

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பன்னிரண்டாம் வீடு மற்றும்  பத்தாம் வீட்டின் மீது வருவதால் ஏற்படும் நன்மைகள் சில. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அதிக வருமானம் கிடைக்கும். குரு பகவான் ஆறாவது வீடான வக்ர கதியில் பயணம் செய்வதால் விருச்சிக ராசிக்காரர்கள் வண்டி, வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் பணம் கொடுத்து வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசிக்கு வக்ர பெயர்ச்சி பலன்:

தனுசு ராசி

 

 

தனுசு ராசிக்கு உடல் ஆரோக்கியமுடன் இருக்கும். தொழிலில் அதிக வருமானம் வரும். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் குழந்தைகளினால் குடும்பத்தில் மகிழ்ச்சியானா சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய சொத்து பிரச்சனைகள் ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால் இப்பொழுது முடிவுக்கு வரும்.

மகர ராசிக்கு வக்ர பெயர்ச்சி பலன்:

மகர ராசி

 

உங்கள் ராசிக்கு குரு பகவானின் பார்வை அஷ்டம ஸ்தானம், தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானங்களின் மீதும்  விழுகிறது. நீங்கள் முயற்சி செய்தால் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதியும், விரைய ஸ்தான அதிபதியுமான  குரு பகவான் இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் ராகு உடன் பயணம் செய்யப்போவது சாதகமானதல்ல. உங்கள் ராசிக்கு ஏழரை சனி நடப்பதால் பணம்  பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது.

கும்ப ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி பலன்:

கும்ப ராசி

 

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும் மற்றும்  பதினோராம் வீட்டையும் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறும். குரு பலன் வந்திருப்பதால் நீண்டகாலமாக தடை பட்டு வந்த திருமண சுபகாரியம் நடைபெறும். உடல் உழைப்பு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு  மூன்றாவது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்வதால்  முயற்சிகளில் இறங்கினால் வெற்றி கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement