குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்..! இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்..!

Advertisement

Hamsa Raja Yoga Formed By Guru in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. அதுபோல கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருப்பதில்லை. ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயர்கின்றன. அப்படி இடம் பெயரும் போது ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை செய்யும். சில ராசிகளுக்கு தீமைகளை செய்யும். அந்த வகையில் மேஷ ராசியில் குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயம் ஹம்ச ராஜயோகத்தை உருவாக்கியது. இந்த ஹம்ச ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித்தர போகிறது. அந்த ராசிகாரர்கள் நீங்களா என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்..!

ஏப்ரல் 22-ம் தேதி குரு பகவான் மீன ராசியிலிருந்து விலகி, ஒரு ராசி சுழற்சியை முடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் நுழைந்தார். குருவின் உதயத்தால் சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஹம்ச ராஜயோகம் உருவாகி உள்ளது. எனவே குரு உதயினால் உருவாகும் ஹம்ச ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்..!

தனுசு ராசி:

தனுசு ராசி

குருவின் ஹம்ச ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அள்ளித் தரப்போகிறது. உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். திடீர் பணவரவு உங்களை தேடி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எல்லாவற்றிலும் இந்த நேரம் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.

2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு.. சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது.. 

மீன ராசி:

மீன ராசி

குருவின் உதயத்தால் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அதிக பணவரவால் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இருந்தாலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா..

கடக ராசி:

கடக ராசி

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் ஹம்ச ராஜயோகம் அதிர்ஷ்டத்தை மழையாக பொழியப்போகிறது. பணி இடத்தில் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டப்போகிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவேண்டும் என்று நினைத்தவர்கள் கனவு நிறைவேறும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பணவரவு அதிகமாக காணப்படும்.

ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement