நீங்கள் கையில் கட்டியிருக்கும் கயிற்றின் நிறத்தை வைத்து உங்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம்

Advertisement

கையில் கயிறு கட்டுவது ஏன்.?

வணக்கம் ஆன்மிக நண்பர்களே.! ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கையில் கயிறு கட்டும் பழக்கம் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியான கலர் கயிற்றை கட்டுவதில்லை. பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்களில் கட்டுவார்கள். இது போல் கயிறு கட்டுவதை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம்.

கையில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்.?

கருப்பு கயிறு பெருமாள் கோவில் மற்றும் முருகன் கோவிலில் கொடுப்பார்கள். இந்த கருப்பு கயிறு கட்டியிருப்பவரகள் எந்த செயல் செய்தாலும் தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களின் தோற்றம் கம்பீரமாக இருக்கும். மேலும் இவர்கள் எந்த செயல் செய்தாலும் நேர்மையாகவும், நியாயமாகவும் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களிடம் மற்றவர்கள் அதிகாரமாக எந்த வேலை செய்ய சொன்னாலும் பிடிக்காது. இவர்கள் கூட இருப்பவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ ஆண்களின் தாடியை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம் ..!

கையில் பச்சை கயிறு:

பச்சை கயிறு முருகன் கோவிலில் கொடுப்பார்கள். மேலும் இந்த கயிறு கட்டியிருப்பவர்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் கஷ்டமான செயலையும் ஈசியாக செய்து விடுவார்கள். புதிதாக ஒரு விஷயத்தை கற்று கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தவர்களாக இருப்பார்கள். 

மஞ்சள் கயிறு கையில்:

மஞ்சள் கயிறு கட்டுபவர்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைப்பவரகள். மேலும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். குடும்பத்தில் பொறுப்பாக இருப்பார்கள். காதல், அன்பு போன்ற உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த செயல் செய்தால் நல்லது என்று ஆராய்ந்து முடுவெடுப்பார்கள். மற்றவர்கள் எதாவது பிரச்சனை என்று வந்து சொன்னால் அதற்கான சிறந்த தீர்வை கொடுப்பார்கள். 

சிவப்பு கயிறு:

சிவப்பு கயிறு கட்டுபவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள்.  மற்றவர்கள் ஒரு  செயலை செய்ய முடியாது என்று சொன்னால் அந்த செயலை மன தன்னமிக்கையோடு செய்வார்கள். மற்றவர்களின் மீது அன்பாகவும், அக்கறையாகவும் இருப்பீர்கள். இவர்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி மற்றவர்களை வழி நடத்தும் விதம் சிறப்பாக இருக்கும். சுருக்கமாக சொன்னால் தலைமை பண்பு காணப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ கையை இப்படி முறுக்கிறீங்களா..! அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement