ஹனுமான் ஜெயந்தி தேதி மற்றும் நேரம் 2024 | Hanuman Jayanthi 2024 Date and Time In Tamil
ஹனுமான் பிறந்த தேதியை தான் ஹனுமான் ஜெயந்தி என்று நாம் கொண்டாடுகிறோம். அணைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்த ஹனுமான் ராமர் உடன் சேர்ந்து சீதாவை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவார். ஹனுமான் ராமரின் பக்தன் ஆவார். ஹனுமான் ஜெயந்தியை தென் இந்தியாவிலும் வட இந்தியாவிலும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இன்றைய பதிவில் ஹனுமான் ஜெயந்தி 2024 ஆம் ஆண்டு எப்போது என்று தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
ஹனுமான் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஹனுமான் ஜெயந்தி தமிழ்நாட்டில் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அனைத்து ஆஞ்சநேயர் கோவிகளிலும் பக்தர்கள் ஹநுமானுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஹனுமான் ஜெயந்தி எப்போது என்று பார்க்கலாம் வாருங்கள்.
ஹனுமான் சாலிசா லிரிக்ஸ் | Hanuman Chalisa Lyrics Tamil
ஹனுமான் ஜெயந்தி எப்போது?
இந்த ஆண்டு 2024 ஹனுமான் ஜெயந்தி டிசம்பர் 30 ஆம் தேதி, (மார்கழி 15 ஆம் தேதி), திங்கட்கிழமை அன்று வருகிறது.
அம்மாவாசை திதி தொடங்கும் நேரம் – டிசம்பர் 30 ஆம் தேதி, அதிகாலை 04:01 AM மணி
அம்மாவாசை திதி முடியும் நேரம் – டிசம்பர் 31 ஆம் தேதி, அதிகாலை 03:56 AM மணி
Hanuman Jayanthi Date In Tamil:
ஹனுமான் ஜெயந்தி ஒரு வருடத்தில் இரண்டு தடவை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மார்கழி மாதம் அம்மாவாசை அன்று ஹனுமான் மூல நட்சத்திரத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் பங்குனி மாதம் வரும் பௌர்ணமி அன்று தான் ஹனுமான் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த வகையில் இந்த வருடம் தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வரும் அம்மாவாசை தினம் அதாவது மார்கழி மாதம் 15 ஆம் தேதி (டிசம்பர் 30) திங்கட்கிழமை அன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஹனுமான் பக்தர்கள் அனைவரும் டிசம்பர் 30 ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று ஹனுமனை வழிபடுங்கள்.
தமிழ்நாட்டில் ஹனுமான் ஜெயந்தி டிசம்பர் 30, 2024(மார்கழி 15) திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
Arudra Darisanam 2025 Date And Time in Tamil
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |