ஹனுமான் ஜெயந்தி வழிபடும் முறை..! | Hanuman Jayanti Valipadum Murai In Tamil..!
ஹனுமான் ஜெயந்தி என்றால் ஹனுமான் பிறந்த தினத்தை தான் ஹனுமான் ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஹனுமான் ஜெயந்தி அன்று என்ன செய்ய வேண்டும் எப்படி விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும் என்பதை இன்றைய பதிவில் காணுங்கள்.
ஹனுமான் ராமரின் தீவிர பக்தன் மற்றும் ராமரின் சேவகன் ஆவார். ஹனுமனை வணங்கும் போது நமக்கு தைரியம் மற்றும் பலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹனுமான் ஜெயந்தி அன்று நம் ஊரில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் பூஜை மற்றும் அபிஷகம் நடக்கும். ஹனுமான் பக்தர்கள் அனைவரும் ஹனுமான் ஜெயந்தி அன்று உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று ஹனுமனை வழிபடுங்கள்.
ஹனுமான் ஜெயந்தி 2024 ஆம் ஆண்டு எப்போது கொண்டாடப்படுகிறது..? | தேதி மற்றும் நேரம் இதோ..!
ஹனுமான் ஜெயந்தி வழிபடும் முறை:
ஹனுமான் ஜெயந்தி டிசம்பர் 30 ஆம் தேதி (மார்கழி 15 ஆம் தேதி), திங்கட்கிழமை அன்று வருகிறது. ஹனுமான் ஜெயந்தி ஒரு வருடத்தில் இரண்டு தடவை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மார்கழி மாதம் அம்மாவாசை அன்று ஹனுமான் மூல நட்சத்திரத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் பங்குனி மாதம் வரும் பௌர்ணமி அன்று தான் ஹனுமான் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.
ஹனுமான் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முஹூர்த்த வேலையில் குளித்து ராம நாமம் சொல்லி விரதத்தை தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ஹனுமான் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். துளசி மாலை அல்லது வெற்றிலை மாலை மற்றும் வெண்ணை காப்பு சாத்தியும் வணங்கலாம்.
பொறி, பழம், அவல், கடலை, சக்கரை, வெண்ணை, நெய், பானகம், இளநீர் போன்றவைகளை நெய்வைத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். மதிய வேலையில் உணவு எடுத்து கொள்ளலாம். சனி பகவானையும், வீர ஆஞ்சநேயனையும் ஹனுமான் ஜெயந்தி அன்று வழிபட்டால் சனி தோஷத்தில் இருந்து பாதுகாப்பினை பெறலாம்.
ஹனுமான் ஜெயந்தி அன்று ஸ்ரீ ராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். சகல ஆனதங்களையும் வழங்கும் ஆஞ்சநேயனை ஹனுமான் ஜெயந்தி அன்று வழிபட்டு அவரின் அருளை பெறுங்கள்.
ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை | How To Write Sri Rama Jayam in Tamil
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












