ஹயக்ரீவ ஸ்தோத்திரம் | Hayagreeva Stotram Lyrics in Tamil

Advertisement

Hayagreeva Stotram Lyrics in Tamil | ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

மைந்தனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்கு மிகவும் முக்கியமான மூன்று விஷயங்கள் கல்வி, செல்வம் மற்றும் வீரம் ஆகும். இதில் முதலாவதாக உள்ள கல்வி நம்மிடம் இருந்துவிட்டால் மற்ற இரண்டுமே நம்மை தானாக வந்து சேர்ந்துவிடும். நமக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தரும் கடவுள் யார் என்று கேட்டால் நாம் அனைவருமே சரஸ்வதி தேவி என்று தான் கூறுவோம். ஆனால் நமக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தருவதற்கு இன்னும் ஒரு கடவுள் இருக்கின்றார், அவர்தான் சரஸ்வதி தேவியின் குருவான ஹயக்ரீவர். இவரும் நமக்கு தேவையான ஞானத்தையும் கல்வியையும் அளித்தருகின்றார்.

 ஹய என்றால் குதிரை என்றும், க்ரீவா என்றால் கழுத்து என்றும் பொருள்படும். ஒருவர் தன்னுடைய ஞானம் மற்றும் அறிவு திறனை பெருக்கிக்கொண்டு, அதன் மூலம் வாழ்வில் அவர்களுக்கு அனைத்து விதமான நலன்களை அள்ளிக் கொடுத்து, குதிரையை போல் கம்பீரமாக வாழ வைக்கக் கூடிய தன்மை கொண்டவர் ஹயக்ரீவர் ஆவர. ஹயக்ரீவரை பிரம்ம முகூர்த்தம், ஏகாதசி, நவமி திதிகள், புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை வணங்குவது மிகவும் நல்லது.  

ஆனால் அவரை முறையாக வழிபடுபவர்களுக்கு மட்டும் தான். முறையாக வழிபடுதல் என்றால் அவரின் போற்றிகள், மந்திரங்கள், அஷ்டோத்திரம் மற்றும் ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை இன்றைய பதிவில் பதிவிட்டுளோம். அதனால் இதனை முழுதாக படித்து ஹயக்ரீவரின் அருளையும் ஆசியையும் பெற்று கொள்ளுங்கள். ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை 9, 11,108,1008 என்ற முறையில் நீங்கள் உச்சரித்து வந்தால் நல்ல பலன்களை பெறலாம். மேலும், இந்த மந்திரத்தை சொல்லும்போது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து இருக்க வேண்டும்.

விஷ்ணு அஷ்டோத்திரம்

Hayagreeva Stotram in Tamil:

Hayagreeva Stotram in Tamil

ஜ்ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே 1

ஸ்வதஸ்ஸித்தம் ஶுத்தஸ்படிகமணிபூ ப்ருத்ப்ரதிபடம்
ஸுதாஸத்ரீசீபிர்த்யுதிபிரவதாதத்ரிபுவனம்
அனந்தைஸ்த்ரய்யந்தைரனுவிஹித ஹேஷாஹலஹலம்
ஹதாஶேஷாவத்யம் ஹயவதனமீடேமஹிமஹ꞉ 2

ஸமாஹாரஸ்ஸாம்னாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம்
லய꞉ ப்ரத்யூஹானாம் லஹரிவிததிர்போதஜலதே꞉
கதாதர்பக்ஷுப்யத்கதககுலகோலாஹலபவம்
ஹரத்வந்தர்த்வாந்தம் ஹயவதனஹேஷாஹலஹல꞉ 3

ப்ராசீ ஸந்த்யா காசிதந்தர்னிஶாயா꞉
ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜனஶ்ரீரபூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜிவக்த்ரா
வாகீஶாக்யா வாஸுதேவஸ்ய மூர்தி꞉ 4

விஶுத்தவிஜ்ஞானகனஸ்வரூபம்
விஜ்ஞானவிஶ்ராணனபத்ததீக்ஷம்
தயானிதிம் தேஹப்ருதாம் ஶரண்யம்
தேவம் ஹயக்ரீவமஹம் ப்ரபத்யே 5

அபௌருஷேயைரபி வாக்ப்ரபஞ்சை꞉
அத்யாபி தே பூதிமத்ருஷ்டபாராம்
ஸ்துவன்னஹம் முக்த இதி த்வயைவ
காருண்யதோ நாத கடாக்ஷணீய꞉ 6

தாக்ஷிண்யரம்யா கிரிஶஸ்ய மூர்தி꞉-
தேவீ ஸரோஜாஸனதர்மபத்னீ
வ்யாஸாதயோ(அ)பி வ்யபதேஶ்யவாச꞉
ஸ்புரந்தி ஸர்வே தவ ஶக்திலேஶை꞉ 7

மந்தோ(அ)பவிஷ்யன்னியதம் விரிஞ்ச꞉
வாசாம் நிதேர்வாஞ்சிதபாகதேய꞉
தைத்யாபனீதான் தயயைன பூயோ(அ)பி
அத்யாபயிஷ்யோ நிகமான்னசேத்த்வம் 8

விதர்கடோலாம் வ்யவதூய ஸத்த்வே
ப்ருஹஸ்பதிம் வர்தயஸே யதஸ்த்வம்
தேனைவ தேவ த்ரிதேஶேஶ்வராணா
அஸ்ப்ருஷ்டடோலாயிதமாதிராஜ்யம் 9

அக்னௌ ஸமித்தார்சிஷி ஸப்ததந்தோ꞉
ஆதஸ்திவான்மந்த்ரமயம் ஶரீரம்
அகண்டஸாரைர்ஹவிஷாம் ப்ரதானை꞉
ஆப்யாயனம் வ்யோமஸதாம் விதத்ஸே 10

யன்மூல மீத்ருக்ப்ரதிபாதத்த்வம்
யா மூலமாம்னாயமஹாத்ருமாணாம்
தத்த்வேன ஜானந்தி விஶுத்தஸத்த்வா꞉
த்வாமக்ஷராமக்ஷரமாத்ருகாம் த்வாம் 11

அவ்யாக்ருதாத்வ்யாக்ருதவானஸி த்வம்
நாமானி ரூபாணி ச யானி பூர்வம்
ஶம்ஸந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம்
வாகீஶ்வர த்வாம் த்வதுபஜ்ஞவாச꞉ 12

முக்தேந்துனிஷ்யந்தவிலோபனீயாம்
மூர்திம் தவானந்தஸுதாப்ரஸூதிம்
விபஶ்சிதஶ்சேதஸி பாவயந்தே
வேலாமுதாராமிவ துக்த ஸிந்தோ꞉ 13

மனோகதம் பஶ்யதி யஸ்ஸதா த்வாம்
மனீஷிணாம் மானஸராஜஹம்ஸம்
ஸ்வயம்புரோபாவவிவாதபாஜ꞉
கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம் 14

அபி க்ஷணார்தம் கலயந்தி யே த்வாம்
ஆப்லாவயந்தம் விஶதைர்மயூகை꞉
வாசாம் ப்ரவாஹைரனிவாரிதைஸ்தே
மந்தாகினீம் மந்தயிதும் க்ஷமந்தே 15

ஸ்வாமின்பவத்த்யானஸுதாபிஷேகாத்
வஹந்தி தன்யா꞉ புலகானுபந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம்
அங்க்வேஷ்வி வானந்ததுமங்குரந்தம் 16

ஸ்வாமின்ப்ரதீசா ஹ்ருதயேன தன்யா꞉
த்வத்த்யானசந்த்ரோதயவர்தமானம்
அமாந்தமானந்தபயோதிமந்த꞉
பயோபி ரக்ஷ்ணாம் பரிவாஹயந்தி 17

ஸ்வைரானுபாவாஸ் த்வததீனபாவா꞉
ஸம்ருத்தவீர்யாஸ்த்வதனுக்ரஹேண
விபஶ்சிதோனாத தரந்தி மாயாம்
வைஹாரிகீம் மோஹனபிஞ்சிகாம் தே 18

ப்ராங்னிர்மிதானாம் தபஸாம் விபாகா꞉
ப்ரத்யக்ரனிஶ்ஶ்ரேயஸஸம்பதோ மே
ஸமேதிஷீரம் ஸ்தவ பாதபத்மே
ஸங்கல்பசிந்தாமணய꞉ ப்ரணாமா꞉ 19

விலுப்தமூர்தன்யலிபிக்ரமாணா
ஸுரேந்த்ரசூடாபதலாலிதானாம்
த்வதங்க்ரி ராஜீவரஜ꞉கணானாம்
பூயான்ப்ரஸாதோ மயி நாத பூயாத் 20

பரிஸ்புரன்னூபுரசித்ரபானு –
ப்ரகாஶனிர்தூததமோனுஷங்கா
பதத்வயீம் தே பரிசின்மஹே(அ)ந்த꞉
ப்ரபோதராஜீவவிபாதஸந்த்யாம் 21

த்வத்கிங்கராலங்கரணோசிதானாம்
த்வயைவ கல்பாந்தரபாலிதானாம்
மஞ்ஜுப்ரணாதம் மணினூபுரம் தே
மஞ்ஜூஷிகாம் வேதகிராம் ப்ரதீம꞉ 22

ஸஞ்சிந்தயாமி ப்ரதிபாதஶாஸ்தான்
ஸந்துக்ஷயந்தம் ஸமயப்ரதீபான்
விஜ்ஞானகல்பத்ருமபல்லவாபம்
வ்யாக்யானமுத்ராமதுரம் கரம் தே 23

சித்தே கரோமி ஸ்புரிதாக்ஷமாலம்
ஸவ்யேதரம் நாத கரம் த்வதீயம்
ஜ்ஞானாம்ருதோதஞ்சனலம்படானாம்
லீலாகடீயந்த்ரமிவா(ஆ)ஶ்ரிதானாம் 24

ப்ரபோதஸிந்தோரருணை꞉ ப்ரகாஶை꞉
ப்ரவாளஸங்காதமிவோத்வஹந்தம்
விபாவயே தேவ ஸ புஸ்தகம் தே
வாமம் கரம் தக்ஷிணமாஶ்ரிதானாம் 25

தமாம் ஸிபித்த்வாவிஶதைர்மயூகை꞉
ஸம்ப்ரீணயந்தம் விதுஷஶ்சகோரான்
நிஶாமயே த்வாம் நவபுண்டரீகே
ஶரத்கனேசந்த்ரமிவ ஸ்புரந்தம் 26

திஶந்து மே தேவ ஸதா த்வதீயா꞉
தயாதரங்கானுசரா꞉ கடாக்ஷா꞉
ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ருதங்க்ஷரந்தீம்
ஸரஸ்வதீம் ஸம்ஶ்ரிதகாமதேனும் 27

விஶேஷவித்பாரிஷதேஷு நாத
விதக்தகோஷ்டீ ஸமராங்கணேஷு
ஜிகீஷதோ மே கவிதார்கிகேந்த்ரான்
ஜிஹ்வாக்ரஸிம்ஹாஸனமப்யுபேயா꞉ 28

த்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபன்ன꞉
த்வாமுத்க்ருணன் ஶப்தமயேன தாம்னா
ஸ்வாமின்ஸமாஜேஷு ஸமேதிஷீய
ஸ்வச்சந்தவாதாஹவபத்தஶூர꞉ 29

நானாவிதானாமகதி꞉ கலானாம்
ந சாபி தீர்தேஷு க்ருதாவதார꞉
த்ருவம் தவா(அ)னாத பரிக்ரஹாயா꞉
நவ நவம் பாத்ரமஹம் தயாயா꞉ 30

அகம்பனீயான்யபனீதிபேதை꞉
அலங்க்ருஷீரன் ஹ்ருதயம் மதீயம்
ஶங்கா களங்கா பகமோஜ்ஜ்வலானி
தத்த்வானி ஸம்யஞ்சி தவ ப்ரஸாதாத் 31

வ்யாக்யாமுத்ராம் கரஸரஸிஜை꞉ புஸ்தகம் ஶங்கசக்ரே
பிப்ரத்பின்ன ஸ்படிகருசிரே புண்டரீகே நிஷண்ண꞉
அம்லானஶ்ரீரம்ருதவிஶதைரம்ஶுபி꞉ ப்லாவயன்மாம்
ஆவிர்பூயாதனகமஹிமாமானஸே வாகதீஶ꞉ 32

வாகர்தஸித்திஹேதோ꞉படத ஹயக்ரீவஸம்ஸ்துதிம் பக்த்யா
கவிதார்கிககேஸரிணா வேங்கடனாதேன விரசிதாமேதாம் 33

ஹயக்ரீவ ஸ்தோத்திரம் pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement