பணவரவு அதிகரிக்க பரிகாரம்
வீட்டில் கணவன், மனைவி இரண்டு நபரும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் சம்பாதிக்கின்ற பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை. பணத்தை சேமிக்க நினைத்தாலும் சேமிக்க முடிவதில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் புலம்புவார்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகி கோவில் கோவிலாக செல்வார்கள். இல்லையென்றால் காசு கொடுத்து பரிகாரம் செய்து பணவரவை அதிகரிக்க நினைப்பார்கள்.
சுக்கிர ஹோரையில் விளக்கை ஏற்றினால் வீட்டில் கோடி கோடியாக பணவரவு ஏற்படும்..!
வருமானம் அதிகரிக்க:
பணவரவு அதிகரிக்க வேண்டுமென்றால் வருமானம் அதிகரிக்க வேண்டும். பணவரவு அதிகரிக்க வேண்டுமென்று நினைத்து பரிகாரம் செய்கிறோம். ஆனால் உங்களுக்கு 10,000 ரூபாய் சம்பளம் என்றால் எப்படி பணவரவை அதிகரிக்க முடியும். அதனால் தான் முதலில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்கள் மட்டும் போதும். அவை என்னென்ன பொருட்கள், எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் கல்லா பெட்டியிலும், வீட்டில் பணம் வைக்கும் இடம், உங்களுடைய பர்ஸ் போன்றவற்றில் கீழே கூறும் பொருட்களை வைத்து விடவும். சுருக்கமாக சொன்னால் பணம் எங்கெல்லாம் வைக்கிறீர்களோ அங்கெல்லாம் வைக்க வேண்டும்.
பெண்களே இந்த மாதிரியான வளையலை மட்டும் கையில் போடுங்கள் பணவரவு அதிகரித்து கொண்டே இருக்கும்..!
2 பச்சை கற்பூரம், 2 ஏலக்காய், 25 சோம்பு எடுத்து கொள்ளவும். இதனை மஞ்சள் துணியை சதுரமாக வெட்டி வைத்து அதன் உள்பகுதியில் வைத்து மஞ்சள் கயிற்றை வைத்து கட்டி விட வேண்டும். இதனை நீங்கள் பணம் வைக்கும் இடம் எல்லாவற்றிலும் வைத்து விட வேண்டும். இதை வைத்து 6 நாட்களுக்கு பிறகு மாற்ற வேண்டும். ஏனென்றால் இதனின் மகிமை 6 நாட்களுக்கு மட்டும் தான் இருக்கும்.
இதை வாய்த்த பிறகு தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வேலை இல்லாதவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். நீங்கள் பணம் சம்மந்தமாக நினைத்த எல்லா காரியமும் நடக்கும்
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை ஒரு முறை செய்து பாருங்க..
வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |