Honey Kanavu Palangal In Tamil
வணக்கம் மக்களே..! இன்றைய பதிவில் தேன் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். தூங்கும் போது நாம் காணும் கனவுகள் அத்தனைக்கும் நல்ல பலனும் இருக்கும் கெட்ட பலனும் இருக்கும். நாம் காணும் கனவிற்கு என்ன அர்த்தம் என்பதை நாம் தேட ஆரம்பிப்போம். கனவு ஒரு அழகான காட்சியாக தான் இருக்கிறது. கனவு காணும் நபர்கள் தூக்கத்தில் பயந்து எழுந்திருப்பார்கள். அதுவே அவர்களுக்கு மன கவலையை அளிக்கும்.
குழந்தைகளுக்கு கூட கனவு வருகிறது. குழந்தைகளும் நல்ல கனவை கண்டால் தூக்கத்தில் சிரிக்கும். கெட்ட கனவு கண்டாலே பயந்து அழுகும். இப்படி கனவு அனைவர் தூக்கத்திலும் வரும் ஒரு அழகிய காட்சியாக தான் இருக்கிறது. கனவில் தேன் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
தேன் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!
தேன் கனவு பலன்கள்:
பொதுவாக தேனை கனவில் கண்டால்: கனவு காண்பவர்க்கு உங்கள் குறிக்கோளில் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்றும் உங்கள் வாழ்வில் அன்பை வெளிப்படுத்தும் நபர்களை சந்திப்பீர்கள் என்றும் உணர்த்துகிறது.
உங்கள் கையில் உள்ள தேனை சாப்பிடுவது போல் கனவு கண்டால்: நீங்கள் மற்றவர்கள் உதவியின்றி தங்கள் இலக்குகளை அடைவீர்கள் என்று உணர்த்துகிறது.
தேன் சாப்பிடுவது போல் கனவு கண்டால்: கனவு காண்பவர்க்கு உங்கள் கடின உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும் என்பதையும், உங்கள் உறவுகளிடம் மிகுந்த அன்புடன் இருப்பீர்கள் என்றும், நீங்கள் விரும்பியதை அடைவீர்கள் என்றும் கனவு உணர்த்துகிறது.
தேனீ மற்றும் தேனை கனவில் கண்டால்: கனவு காண்பவர்க்கு சம்பள உயர்வும், உங்கள் நீண்ட நாள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பதையும், புதிய சந்தர்ப்பங்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக வர போகிறது என்று உணர்த்துகிறது.
அடிக்கடி தேன் கனவில் கண்டால்: கனவு காண்பவர்க்கு இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என்பதையும், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் வசதி வாய்ப்பை பெற போகிறீர்கள் என்று கனவு உணர்துகிறது.
அதிக அளவு தேனை கனவில் கண்டால்: நீங்கள் நீண்ட காலமாக வாழில் எதிர்பார்த்த ஒன்று கிடைத்து வாழ்வில் திருப்தியாக இருப்பதை கனவு உணர்த்துகிறது.
தேனை வாங்குவது போல் கனவில் கண்டால்: நீங்கள் உங்கள் வாழ்வை சிறப்பாக மாற்ற எந்த பற்றும் இல்லாமல் திருப்தி இல்லாமல் வாழ்கிறீர்கள், நீங்கள் உங்கள் வாழ்வை சிறப்பாக மாற்ற மேலும் திருப்தியுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று கனவு உணர்த்துகிறது.
ஈக்கள் தேனில் நீந்துவது போல் கனவில் கண்டால்: தவறான எண்ணம் கொண்டிருப்பவர் இடம் ஜாக்கிரதையாக இருக்க கனவு உணர்த்துகிறது.
தரையில் சிந்திய தேனை கனவில் கண்டால்: உங்களுக்கு வர இருக்கும் பிரச்சனைகளை சவாலாக சமாளிக்க வேண்டும் என்று கனவு உணர்த்துகிறது.
தேன் உங்கள் உடல் முழுதும் இருப்பது போல் கனவு கண்டால்: உங்கள் அன்பிற்குரியவர்களிடம் உங்கள் பரஸ்பர அன்பினால் திருப்தியுடன் வாழ்வீர்கள் என்று கனவு உணர்த்துகிறது.
தேன் மற்றும் எறும்பை கனவில் கண்டால்: உங்களை சுற்றி நல்லவர்கள் இருப்பார்கள் ஆனாலும் சில நயவஞ்சகர்கள் உங்களை துன்புறுத்த எண்ணுவார்கள் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் உங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் கனவு உணர்த்துகிறது.
90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய் செய்வது இவ்வளவு ஈஸியா..?
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














