வாடகை வீடு குடி போக உகந்த மாதம் 2024

Advertisement

வாடகை வீடு குடி போக உகந்த மாதம் 2024- வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல மாதம்

இன்றைய சூழலில் பெரும்பாலனவர்களுக்கு சொந்த வீடு என்பது இருப்பதில்லை, வாடகை வீட்டில் இருந்து தான் வாழ்க்கையை வாழ்கின்றன. அதேபோல் வாடகை வீட்டில் இருக்கும் போது தான் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதில் அதிக அவசியம் அவர்களுக்கு தெரியும். ஏன் என்றால் அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் அந்த வீட்டிற்கு என்னென்ன விதிமுறைகளை சொல்வார்கள், வருடத்திற்கு ஒரு முறை வாடகையை ஏற்றுவார்கள். வீட்டில் ஏதாவது பழுதடைந்துவிட்டால் அதற்கு அந்த வீட்டில் குடி இருப்பவர்கள் என்னென்ன பேச்சை எல்லாம் வாங்க வேண்டும் என்று வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்.

இதன் காரணமாகவே பெரும்பாலான நபர்கள் வாடகை வீட்டை விட்டுவிட்டு சொந்தமாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று அதிக பாடுபடுவார்கள். இன்றைய கால கட்டத்தில் நிறைய நபர்கள் வாடகை வீட்டில் இருந்து கொண்டு, அவர்களது கனவு இல்லத்தினை கட்டி முடிகின்றன. அதிலும் சிலர் சொந்த வீட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்று வீட்டை இடித்துவிட்டு வாடகை வீட்டில் இருந்துகொண்டு தங்களு சொந்த வீட்டை காட்டுகின்றன, இன்னும் சிலர் இருக்கும் வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடி போகின்றன. யாராக இருந்தாலும் சரி அவர்கள் வாடகை வீட்டிற்கு குடி போகும் அதற்கான உகந்த மாதத்தில் தான் செல்ல வேண்டும். அது என்ன உகந்த மாதம் என்று கேட்குறீர்களா? ஆக வாடகை வீட்டிற்கு செல்ல உகந்த மாதம் இருக்கிறது அதனை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

வாடகை வீடு குடு போக உகந்த மாதங்கள்:

• சித்திரை
• வைகாசி
• ஆவணி
• ஐப்பசி
• கார்த்திகை
• தை
• பங்குனி (பங்குனி மாதம் புது வீடு கிரகபிரவேசம் செய்வது தான் கூடாது. ஆனால், வாடகை வீட்டிற்கு குடி போகலாம்.)

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள்

சித்திரை:

வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் எந்த கவலையுமின்றி தாராளமாக வாடகை வீட்டிற்கு குடி போகலாம்.

வைகாசி:

வைகாசி மாதத்திலும் வாடகை வீட்டிற்கு குடி போவது நன்மையை தரும்.

ஆனி:

ஆனி மாதத்தில் வடக்கை வீட்டிற்கு குடி போக கூடாது. ஏனென்றால், இந்த மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார். அதனால், நாம் வாழும் வீட்டை ஆனி மாதத்தில் கிரகப் பிரவேசம் செய்வது, புது வீடு கட்ட தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.

ஆடி:

ஆடி மாதத்தில் வாடகை வீட்டிற்கு  குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் மிகப்பெரிய சிவ பக்தனான ராவணன் தனது இலங்கை கோட்டையை இழந்தார் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆவணி:

ஆவணி மாதம் வாடகை வீட்டிற்கு குடி போக உகந்த நல்ல மாதம் ஆகும்.

புரட்டாசி:

புரட்டாசி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடி போக. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

ஐப்பசி:

ஐப்பசி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடி போகலாம்.

கார்த்திகை:

கார்த்திகை மாதத்திலும் வாடகை வீட்டில் குடி போகலாம் இதுவும் உகந்த மாதமே.

மார்கழி:

மார்கழி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார். ஆக இந்த மாதத்தை முற்றிலும் தவிர்களும். அது போக இந்த மாதத்தை பீடை பிடித்த மாதம் என்றும் அழைப்பார்கள்.

தை:

தை மாதத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் தாராளமாக வாடகை வீட்டிற்கு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசம் செய்யலாம்.

மாசி:

மாசி மாதத்தில் தான் சிவபிரான் ஆலகால விஷம் அருந்தி மயக்கமடைந்தார். அதனால், மாசி மாதத்தில் வீடு குடி போவதை தவிர்க்க வேண்டும்.

பங்குனி:

சிவ பெருமான் மன்மதனை எரித்தது இந்த பங்குனி மாதத்தில் தான். அதனால், பங்குனி மாதத்தில் புது வீட்டிற்கு குடி போவதை தவிர்க்கவும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement